ஹிட் & ரன் சட்டம் இன்னும் அமலாகவில்லை! ஸ்ட்ரைக்கை வாபஸ் வாங்க வைத்த மத்திய அரசு

Bharatiya Nyaya Sanhita 106/2 On Hold: ஹிட் அண்ட் ரன் தொடர்பானபுதிய சட்டங்கள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்ற மத்திய அரசின் உறுதிமொழியை அடுத்து, வாகன ஓட்டுநர்களின் நாடு தழுவிய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 3, 2024, 06:42 AM IST
  • வாகன ஓட்டுநர்களின் நாடு தழுவிய போராட்டம் வாபஸ்
  • மத்திய அரசின் உறுதிமொழி
  • ஹிட் அண்ட் ரன் சட்டம் வாபஸ்
ஹிட் & ரன் சட்டம் இன்னும் அமலாகவில்லை! ஸ்ட்ரைக்கை வாபஸ் வாங்க வைத்த மத்திய அரசு title=

புதுடெல்லி: இரண்டு நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை லாரி ஓட்டுநர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு லாரி ஓட்டுநர்கள் இதனை அறிவித்துள்ளனர். புதிய சட்ட திருத்தத்தின்படி சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் முடிவை எதிர்த்து போராட்டங்கள் துவங்கின.

மத்திய அரசின் Hit-And-Run Law சட்டத் திருத்தத்தை எதிர்த்து வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள், புத்தாண்டு தொடங்கியதுமே திங்கட்கிழமையன்று தொடங்கினார்கள். போராட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று (2024 ஜனவரி 2) மத்திய அரசு பிரதிநிதிகளுடன் மோட்டார் வாகன சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

போராட்டம் மற்றும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, தற்காலிமாக இந்த ஹிட் அண்ட் ரன் சட்ட திருத்தத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்தார். மத்திய அரசின் இந்த உறுதிமொழியை அடுத்து, லாரி ஓட்டுநர்கள் தங்களது போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸின் தலைவர் அம்ரித் லால் மதன், போராட்டத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர்களிடம் பேசுகையில், "நீங்கள் எங்கள் ஓட்டுநர்கள் மட்டுமல்ல; நீங்கள் எங்கள் வீரர்கள். நீங்கள் எந்த சிரமத்தையும் சந்திக்க நாங்கள் விரும்பவில்லை" என்று கூறினார். 

மேலும் படிக்க | ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிக்க... சில பயனுள்ள டிப்ஸ்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதலில் விதிக்கப்பட்ட பத்தாண்டுகள் தண்டனை மற்றும் அபராதத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தொழிற்சங்கத் தலைவர் தெரிவித்தார். முக்கியமாக, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸின் அடுத்த கூட்டம் வரை புதிய சட்டங்கள் எதுவும் அமல்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார்.

நூற்றுக்கணக்கான டிரான்ஸ்போர்ட்டர்கள் மற்றும் ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர்கள், சமீபத்தில் மத்திய அரசால் இயற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டம் குறித்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள், ''அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டது.

பாரதீய நியாய சன்ஹிதா 106/2 நிறுத்தி வைப்பு (Bharatiya Nyaya Sanhita 106/2 On Hold)

மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, "அனைத்திந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் நாங்கள் விவாதித்தோம்" என்று உறுதியளிப்பதன் மூலம் பேச்சுவார்த்தைக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். பாரதிய நியாய சன்ஹிதா 106/2 என்ற புதிய விதி இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். "விதியை அமல்படுத்துவதற்கு முன், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் நாங்கள் விவாதத்தில் ஈடுபடுவோம், அதன்பிறகுதான் முடிவு எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
 
போக்குவரத்துத் தொழிலாளர்கள் உடனடியாக பணியைத் தொடங்குவார்கள் என்று அரசும், போக்குவரத்துக் கழகமும் ஒப்புக்கொண்டதாகவும், அவர்கள் பணியைத் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் பல்லா மேலும் தெரிவித்தார்.

புதிய ஹிட் அண்ட் ரன் சட்டம்: பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyay Sanhita (BNS))
இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பாரதீய நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) கீழ், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்கள், இது தொடர்பாக புகாரளிக்காமல் தப்பி ஓடினால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 

புதிய சட்டம் தொடர்பான கவலைகள்
இந்தச் சட்டம் ஓட்டுநர்களுக்கு எதிரானது என்றும், அநியாயமான தண்டனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவித்து வந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முயலும் போது, கும்பல் வன்முறை சாத்தியம் என்பது குறித்து கவலைகளை தெரிவித்த அவர்கள், சட்டத்தை திரும்பப் பெறுமாறு கோரினார்கள்.

மேலும் படிக்க | வரி செலுத்துவோருக்கு சூப்பர் செய்தி, வருமானம் வந்தாலும் வரி செலுத்த வேண்டாம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News