பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் நாங்கள் தான் பெரிய அண்ணன்: சிவசேனா

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பிஜேபி மற்றும் சிவசேனா கூட்டணி தொடரும் என தகவல். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 28, 2019, 05:36 PM IST
பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் நாங்கள் தான் பெரிய அண்ணன்: சிவசேனா title=

தற்போது பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா வசித்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பிஜேபியுடன் சேர்ந்து சிவசேனா கட்சி போட்டியிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது சிவசேனா. சிலநாட்களுக்கு முன்பு 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது எனவும் அறிவித்தது. இதனையடுத்து சிவசேனாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பிஜேபி ஈடுபட்டு வந்தது. 

நமக்கு கிடைத்த தகவலின் படி, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லத்தில், சிவசேனா கட்சியின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள். அதில் மக்களவைத் தேர்தல் குறித்தும், யாருடன் கூட்டணி போன்ற பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

2019 மக்களவை தேர்தலில் பிஜேபி மற்றும் சிவசேனா நட்பு தொடர்ந்து இருக்கும். மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி முழுத்திறமையையும் மீண்டும் காட்ட உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கப்பட்டுள்ளன. எங்கள் தலைவர் உத்தவ் தாக்கரே, அவருக்காக நாங்கள் போராட(தேர்தலில் வேலை செய்ய) தயாராக உள்ளோம். நாங்கள் போராடுவோம். மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் பாஜகவும், சிவசேனாவும் சகோதரர்களாக இருக்கிறோம். ஆனால் மகாராஷ்டிராவில் நாங்கள் பெரிய சகோதரர்களாக இருக்கிறோம். எப்போதும் நாங்கள் தான் அண்ணன். மாநிலத்திலும், தேசிய அரசியலிலும் முழு கவனம் செலுத்துவோம். 

நான்கள் யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. யாருக்கு எங்களுடன் கூட்டணி குறித்து பேசவிருப்பமோ அவர்கள் முதலில் வரட்டும் எனக் கூறியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது பாஜக - சிவசேனா கூட்டணி மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 41 தொகுதியில் வெற்றி பெற்றது. அதில் பாஜக 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News