அகிலேஷ் யாதவுக்கு கெடு விதித்த மாயாவதி - 2 நாள் டைம்.. சீக்கிரம் முடிவெடுங்கள்..

நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, பிஎஸ்பி இன்னும் தேர்தல் அறிக்கையை தயார் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 14, 2019, 01:25 PM IST
அகிலேஷ் யாதவுக்கு கெடு விதித்த மாயாவதி - 2 நாள் டைம்.. சீக்கிரம் முடிவெடுங்கள்.. title=

ராவண் என்ற பெயரில் அழைக்கப்படும் சந்திரசேகர் ஆசாத்தை பிரியங்கா காந்தி சந்தித்த பிறகு ஒரு குழப்பமான சூழல் உ.பி-யில் நிலவுகிறது. உத்திரப் பிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் வசிக்கும் பீம் ஆர்மியின் தலைவராக இருக்கும் சந்திரசேகர் ஆசாத்-க்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை சந்திக்க பிரியங்கா காந்தி சென்றார். ஆனால் முதலில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அனுமதி வழங்கப்பட்டது. 

சந்திரசேகர் ஆசாத்தை சந்தித்து உடல் நலம் விசாரித்த பிரியங்கா காந்தி பின்னர் கூறியதாவது, சந்திரசேகர் ஆசாத்தை கைது செய்து அவரின் குரலை ஒடுக்க மாநில அரசு முயற்சித்து வருகிறது. அவருக்கு ஆதரவு அளிக்க தான் நான் இன்று அவரை சந்தித்து பேசினேன் என்றுக் கூறினார். 

தலித் மக்களின் வாக்குகளை சேகரிப்பதற்காக தான் சந்திரசேகர் ஆசாத்தை சந்தித்து பிரியங்கா காந்தி பேசினார் என்று கூறப்படுகிறது. இதனால் மாயாவதி மிகவும் கோபமாக உள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மாநில தலைநகரான லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசியுள்ளனர். கிட்டத்தட்ட சுமார் அரைமணி நேரம் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த சந்திப்பில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியிலும் சீக்கிரம் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்று மாயாவதி அழுத்தம் கொடுத்துள்ளார். மேலும் இதுக்குறித்து இரண்டு நாளில் முடிவெடுக்க வேண்டும் என்றும் அகிலேஷ் யாதவிடம் மாயாவதி வலியுறுத்தி உள்ளார் எனவும் கூறப்படுகிறது. 

Trending News