Lok Sabha Election 2019: குஜராத் அகமதாபாத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி

மூன்றாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் இன்று 117 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது!!

Last Updated : Apr 23, 2019, 08:48 AM IST
Lok Sabha Election 2019: குஜராத் அகமதாபாத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி title=

23 April 2019, 08:20 AM

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி 


23 April 2019, 08:00 AM

குஜராத் தேர்தலை முன்னிட்டு தனது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கிய பிரதமர் மோடி!!


23 April 2019, 07:39 AM

கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டத்தில் ஆர்.சி. அமலா பசிக் உப் பள்ளியில் வாக்குப்பதிவு செய்ய வரிசையில் நிற்கும் காட்சி. 


23 April 2019, 07:00 AM

கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 


மூன்றாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் இன்று 117 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது!!

ஏழு கட்ட மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 13 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களுக்குட்பட்ட 116 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரும் போட்டியிடுகின்றனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குல்பர்கா தொகுதியிலும், மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே உத்தர கன்னடா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட திரிபுரா மாநிலத்தின் கிழக்குத் தொகுதியிலும் இன்று தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தொகுதியின் நிலைமையைக் கண்காணிக்க முன்னாள் துணைத் தேர்தல் ஆணையர் வினோத் ஸூத்ஸி என்பவரை சிறப்புப் பார்வையாளராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்தத் தேர்தலுடன் குஜராத் மாநிலத்தில் 4 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Trending News