பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு! அதிர்ச்சி காரணம்..

Punjab Girl Dies After Eating Birthday Cake News In Tamil : பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறுமி, பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Mar 31, 2024, 11:35 AM IST
  • பிறந்தநாள் கொண்டாடிய 10 வயது சிறுமி உயிரிழப்பு
  • ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக்கால் வந்த வினை
  • உயிரிழப்பிற்கான காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்!
பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு! அதிர்ச்சி காரணம்.. title=

Punjab Girl Dies After Eating Birthday Cake News In Tamil : பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பல சமயங்களில் சாேகத்தில் முடிவதும், அந்த சாேகம், ஒரு இறப்பாக இருப்பதும் தற்போதைய கால சூழலில் வாடிக்கையாகி வருகிறது. ஆனால், இப்படி பிறந்தநாட்களில் இறந்து போவதில் பெரும்பாலானோர் விபரீத விளையாட்டுகளில் ஈடுபடும் இளைஞர்களாக இருப்பர். ஆனால், தற்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, தனது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் குடும்பத்தினருடன் கொண்டாடியதை அடுத்து, அதற்கடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்திருக்கிறார். இந்த இறப்பிற்கு காரணம் யார்? சிறுமி எதனால் உயிரிழந்தார்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

பஞ்சாப்பை சேர்ந்த சிறுமி..

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், கடந்த வாரம் மார்ச் 24ஆம் தேதியன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் இணைந்து சிம்பிளாக வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். இந்த கேக்கை, அச்சிறுமியின் குடும்பத்தினர், பட்டியாலாவில் உள்ள அதாலத் பஜார் எனும் இடத்தில் இருக்கும் பேக்கரியில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் வரவழைத்துள்ளனர். இந்த கேக், மாலை 6 மணி அளவில் வந்ததை அடுத்து, குடும்பத்தினர் சுமார் 7 மணிக்கு கேக் வெட்டி உள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி உள்பட குடும்பத்தினர் அனைவருமே சாப்பிட்டுள்ளனர். 

குடும்பத்தினர் அனைவருக்கும் உடல்நலக்குறைவு..

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் இரவு 10 மணி அளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. சிறுமியின் தாய், தந்தை ஆகியோருக்கு உடல் உபாதை ஏற்பட்டிருக்கிறது. சிறுமி, தனக்கு அதிகம் தாகம் எடுப்பதாகவும் வாய் வறட்சியாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதன் பிறகு, உறங்க சென்றிருக்கிறார். 

உயிரிழப்பு..

மறுநாள் காலையில், சிறுமியின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு பெற்றோர் விரைந்துள்ளனர். அங்கு சிறுமிக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவருக்கு ஈசிஜி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அச்சிறுமி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்திருக்கிறார்.

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமியின் சகோதரிகள் இருவர், அன்று இரவே வாந்தியெடுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | பணமதிப்பிழப்பின் நோக்கம் என்ன ஆனது... உச்ச நீதிமன்ற நீதிபதி அதிரடி கருத்து!

கேக்தான் காரணமா?

சிறுமியின் உயிரிழப்பிற்கு, அவர் சாப்பிட்ட கேக்தான் காரணம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். அதில் கலந்திருந்த ஏதோ ஒரு விஷப் பொருள்தான் அவரது உயிரை பறித்திருப்பதாக கூறி, போலீஸாரிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து, பேக்கரி உரிமையாளர் மீது பாேலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்காெண்டு வருகின்றனர். 

வைரல் வீடியோ..

உயிரிழந்த சிறுமி குறித்த செய்திகள் வெளிவர தொடங்கியதை அடுத்து, அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அச்சிறுமி முகம் நிறைய புன்னகையுடன் தனது பெற்றோருக்கு கேக் ஊட்டும் காட்சியும், கேமராவை பார்த்து சிரிக்கும் காட்சியும் இடம் பெற்றிருக்கிறது. உயிரிழப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு அச்சிறுமி சிரித்துக்கொண்டு இருக்கும் அந்த வீடியோ, காண்போரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், சிறுமியின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும், கேக்கின் மாதிரி மேற்கட்ட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

மேலும் படிக்க | 6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாத பிரதமர் மோடி! உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News