புதுடெல்லியின் ஜகத்பூர் கிராமத்தினை தத்தெடுத்தது KVIC!

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், புதுடெல்லியில் உள்ள ஜகத்பூர் கிராமத்தினை காதி மற்றும் கிராமிய கைத்தொழில் ஆணையம் தத்தெடுத்துள்ளது!

Last Updated : Jun 20, 2018, 05:10 PM IST
புதுடெல்லியின் ஜகத்பூர் கிராமத்தினை தத்தெடுத்தது KVIC! title=

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், புதுடெல்லியில் உள்ள ஜகத்பூர் கிராமத்தினை காதி மற்றும் கிராமிய கைத்தொழில் ஆணையம் தத்தெடுத்துள்ளது!

ஸ்வாச்சத்தா அபியான் அல்லது சுத்திகரிப்பிற்காக இயங்கும் குழுவின் கீழ் ஜகத்பூர் கிராமத்தினை காதி மற்றும் கிராமிய கைத்தொழில் ஆணையம் தத்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

MSME அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் காதி மற்றும் கிராமிய கைத்தொழில் ஆணைக்குழு, தோட்டக்கலை மூலம் பயிற்சியை ஆரம்பித்து, யமுனா நதியின் கரையோர தூய்மைப் பாய்ச்சல் திட்டம் வரை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஜகத்பூர் கிராமத்தினை தத்தெடுத்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபடவுள்ளது.

இதுகுறித்து காதி மற்றும் கிராமிய கைத்தொழில் ஆணைய தலைவர் வினய் குமார் சக்சேனா தெரிவிக்கையில்... ஸ்வாச்சத்தா அபியான் திட்டத்தின் கீழ் ஜகத்பூர் கிராமத்தினை தத்தெடுத்து தூய்மைப்படுத்துவதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார். மேலும் தங்களின் செயல்பாட்டின் மூலம் ஜகத்பூர் நகர் டெல்லியின் அழகான பகுதிகளின் பெயர் பட்டியலில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேலையில் காதி மற்றும் கிராமிய கைத்தொழில் ஆணையமானது, யமுனை ஆற்றங்கரையில் 20 பசுமை பூங்காக்களை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து தங்களது தூய்மை பணியினை மும்பையில் ஜூஹூ கடற்கரையில் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது காதி மற்றும் கைத்தொழில் ஆணையம் தெரிவித்துள்ளது.

Trending News