கேரளா மாநிலம் மலப்புரத்தில் ஹம்சா என்ற இளைஞர் வசித்து வருகிறார். தற்பொழுது அந்த பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து, பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியாக உள்ளது, இதனால் பல விபத்துகள் நடக்கிறது. மேலும் சாலை சரி இல்லாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த அவல நிலை குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல நினைத்த ஹம்சா, சாலையில் உள்ள பள்ளத்தில் நின்று குளித்தும், துணிகளை துவைத்தும் அந்த இளைஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
மலப்புரம் பாண்டிக்காடு சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் உள்ள அனைத்து சாலைகளின் நிலையும் இதுதான் என்கிறார் அந்த இளைஞர். பாண்டிக்காட்டில் இருந்து பாலக்காடு செல்லும் சாலைகளில் எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் அனைத்து ரோடுகளும் தார் போடப்பட்டது. ஆனால் மீண்டும் பள்ளங்கள் உருவாகின. இதை எப்படி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்று யோசித்த போது தான் கீழே இறங்கி குளிக்கலாமா என்ற எண்ணம் வந்தது.
மேலும் படிக்க | ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பேனர் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி; பலர் காயம்
அப்பொழுது அவ்வழியாக வந்த எம்எல்ஏ யு.ஏ.லத்தீப் முன், இளைஞர் தவம் செய்தும், சாலையில் பள்ளத்தில் உள்ள தண்ணீரில் குளித்தும், துணி துவைத்தும் காட்டினார். இங்கு ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதிகாரிகள் கூட இது தொடர்பில் கவனம் செலுத்தாத காரணத்தினால் தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவில் சாலைகள் குட்டைகளாக மாறி கிடக்கின்றன என ஹம்சா தெரிவித்தார்.
மேலும் படிக்க | மறைமலைநகர் அருகே டிராக்டரில் சிக்கி இரண்டு குழந்தைகள் பலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ