பாலியல் வழக்கில் சிக்கிய கேரளா கன்னியாஸ்திரியை சகோதரிக்கும்அவரது குடும்பத்தாருக்கும் பேராயர் குடும்பத்தால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர்!
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மறை மாவட்ட பிஷபாக பணியாற்றி வந்தவர் பிராங்கோ முலக்கல். இதற்கு முன்னதாக கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் இவர் பாதரியராக இருந்த போது கன்னியாஸ்திரியை ஒருவரை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டினை அடுத்து பிராங்கோ மூலக்கால், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்து பதவி விலகினார். எனினும் கன்னியாஸ்திரி கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, பொய்யானது என மறுத்து வருகிறார்.
Due to hatred, brothers of Franco filed fake complaints against me.Thomas Chittuparamban,a relative of Franco threatened to cause danger to my son & brother. One of his relative named Unni took a photo of me protesting & later threatened me:Sister of Kerala nun rape case's victim
— ANI (@ANI) September 24, 2018
இவ்வழக்கினை கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை செய்து வருகிறது. கடந்த இருவாரங்களுக்கு முன் காவல்துறையினர் ஜலந்தர் சென்று பிராங்கோவின் வீட்டில் விசாரணை நடத்தினார்கள். எனினும் இந்த வழக்கில் பாதரியாரின் மீது நடவடிக்கைகள் எடுக்க தாமதம் காட்டி வரப்படுகிறது என பாதிக்கப்பட்ட கனயாஸ்திரியை உள்பட பலர் போராட்ட களத்தில் இறங்கினர். இதைத்தொடர்ந்து குற்றம்சாட்டம்பட்ட பேராயர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்நிலையில் தற்போது குற்றம்சாட்டப்பட்ட பாதரியாருக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்த தங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் காவல்துறையினை அனுகியுள்ளனர்.
இந்த புகாரி குறிப்பிடப்பட்டுள்ளதாவது... குற்றம்சாட்டப்பட்ட பேராயர் பிராங்கோ மூலக்காலின் உறவினர்களான தாமஸ் சித்தபரம்பன், உன்னி என்பவர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவர்களிடன் இருந்த தன்னையும் தன் குடும்பத்தாரையும் காப்பாற்ற வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்!