Online Rummy: விராட் கோலி, நடிகை தமன்னாவிற்கு கேரளா HC நோட்டீஸ்

ஆல் லைன் ரம்மி விளையாட்டை தடுக்க கோரும் வழக்கில் நடிகர்கள் தமன்னா பாட்டியா, அஜு வர்கீஸ் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 27, 2021, 07:47 PM IST
  • ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடுக்கக் கோரும் மனுவை விசாரணை செய்தது கேரள உயர்நீதிமன்றம்.
  • ஆன்லைன் ரம்மி விளையாட்டு பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு என்பதௌ ஒரு வகை சூதாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Online Rummy: விராட் கோலி, நடிகை தமன்னாவிற்கு கேரளா HC நோட்டீஸ்  title=

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடுக்கக் கோரும் மனுவை விசாரணை செய்த கேரள உயர்நீதிமன்ற பிரிவு நடிகர்கள் தமன்னா பாட்டியா, அஜு வர்கீஸ் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. 

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளின் பிராண்ட் அம்பாசிடர்களாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி (Virat Kohli), தென்னிந்திய நடிகை தமன்னா பாட்டியா மற்றும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் தலைமையிலான கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிமன்ற பிரிவுபுதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. இது குறித்து கேரள அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

கேரளாவில் திருச்சூர் பகுதியை சேர்ந்த பாலி வடக்கன், "ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் மிக அதிகமாக பிரபலமாகி வருகின்றன. இது சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட வேண்டும். மற்ற மாநிலங்களும் இதைச் செய்துள்ளன. கேரளாவில் 1960 ஆம் ஆண்டின் சட்டம் உள்ளது. ஆனால் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் ஆன்லைன் ரம்மி குறித்து எதுவும் கூறவில்லை. பிராண்ட் அம்பாஸிடர்களாக இருக்கும் நட்சத்திரங்கள் பார்வையாளர்களை ஈர்த்து போட்டியில் பங்கேற்றக தூண்டுகின்றனர். ஆன்லைன் ரம்மி ஒரு சூதாட்டம் என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் " என்கிறார்

ஆன் லைன் ரம்மி விளையாட்டின் பிராண்ட் அம்பாஸிடர்கள், மாநில அரசு, மாநில தகவல் தொழில்நுட்பத் துறை, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மற்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை நடத்தும் இரண்டு தனியார் நிறுவனங்கள ஆகியோருக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ |  மேலாடையை நீக்காமல் தொடுவது பாலியல் வன்முறை அல்ல என்ற தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது SC

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News