கர்நாடகா பந்த்: தமிழகத்திற்கு எதிராக போரட்டம்! 144 தடை.. பல விமானங்கள் ரத்து, வாட்டாள் நாகராஜ் கைது,

Karnataka Bandh Updates: காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முழுவதும் பந்த் நடைபெற்றுவருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு, மாண்டியா, மைசூர் உட்பட பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 29, 2023, 01:42 PM IST
  • தமிழகத்துக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை தர வேண்டும் -காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
  • காவிரி நீர் பாசனம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் 140 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னை.
  • பள்ளி, கல்லூரிகளுக்கு நிர்வாகம் விடுமுறை. 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகா பந்த்: தமிழகத்திற்கு எதிராக போரட்டம்! 144 தடை.. பல விமானங்கள் ரத்து, வாட்டாள் நாகராஜ் கைது, title=

Kaveri Water Dispute Latest Updates: காவிரி நதிநீரை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா முழுவதும் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். முக்கியமாக கன்னட மற்றும் விவசாய அமைப்புகளான கன்னட ஒக்கூட்டா சங்கம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. எதிர்க்கட்சியான பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் பந்த்க்கு ஆதரவாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. கர்நாடக காவல்துறை இதுவரை 50க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்துள்ளது. முன்னதாக செப்டம்பர் 26 ஆம் தேதி பெங்களூரு பந்த் நாளில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. 44 விமானங்கள் ரத்து..

கர்நாடகா பந்த் காரணமாக நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகள் மற்றும் ரயில் சேவைகளை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முயற்சித்து வருகின்றனர். கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மெட்ரோ-பஸ் சேவைகள் செயல்படுகின்ற. ஆனால் கூட்டம் குறைவாக உள்ளது. பெங்களூரு மற்றும் மண்டியாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் பிஆர்ஓ அளித்த தகவலின் படி பெங்களூரு மற்றும் அங்கிருந்து புறப்படும் 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகாவின் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்

பெங்களூரு, மாண்டியா, மைசூர், சாமராஜநகர், ராமநகரா மற்றும் ஹாசன் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரே இடத்தில் 4 பேருக்கு மேல் கூடக்கூடாது. இந்த மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன.

மேலும் படிக்க - Karnataka Bandh: எல்லை மீறும் கர்நாடகா! ஸ்டாலினுக்கு திதி கொடுத்து ஒப்பாரி போராட்டம்!

துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் முதல்வர் சித்தராமையா சந்திப்பு

கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமாரை, முதல்வர் சித்தராமையா சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன- முதல்வர் சித்தராமையா

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, காவிரி நதிநீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசியல் செய்வதாக மாநில முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டி இருந்தார். மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவர்கள் பந்த் நடத்தலாம், அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறினார். ஆனால் நாங்கள் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம். அவர்கள் பந்த் நடத்தட்டும். அதேநேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

தண்ணீர் திறக்க முடியாது -துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

அதே சமயம், தமிழக மக்கள் 12,500 கன அடி தண்ணீர் கேட்டுள்ளனர் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். தற்போது 5000 கன அடி தண்ணீர் கூட திறக்க முடியாத நிலையில் உள்ளோம்.

மேலும் படிக்க - "காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் வியைாட்டு": எதிர்க்கட்சிகள் மீது சித்தராமையா குற்றச்சாட்டு!

போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும் -முன்னாள் முதல்வர் குமாரசாமி வலியுறுத்தல்

கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி சமூக வலைதளமான தனது X பக்கத்தில், "தண்ணீர், மொழி போன்ற பிரச்சனைகள் வரும்போது, ​​அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கன்னட குடும்பத்தின் ஒற்றுமை அண்டை மாநிலங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கன்னட உணர்வுகளை அரசு ஒடுக்கக் கூடாது. ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள, கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார். 

கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நதிநீர் பிரச்சனை என்ன?

800 கிமீ நீளம் கொண்ட காவேரி ஆறு கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலையில் இருந்து உருவாகிறது. இது தமிழகம் வழியாக பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. காவேரிப் படுகை கர்நாடகாவின் 32 ஆயிரம் சதுர கிலோமீட்டர் மற்றும் தமிழகத்தின் 44 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. காவிரி நீர் பாசனம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே 140 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னை இருந்து வருகிறது.

காவேரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்துவிட எதிர்ப்பு

கடந்த செப்டம்பர் 13ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் தர வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு கர்நாடக விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

மேலும் படிக்க - சித்தராமையா எதுவும் அறியாமல் பேசுகிறார்! மேகதாது விவகாரத்தில் முழு விவரம் தெரியவில்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News