Karnataka Election 2023 News: கர்நாடக தேர்தல் என்பது தன்னைப் பற்றியது அல்ல என்பதை பிரதமர் நரேந்திர மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதாவது கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த வாரம் பிதார் மாவட்டத்தில் உள்ள ஹம்னாபாத்தில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசும் போது, காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் இதுவரை 91 முறை பல்வேறு வகையான அவதூறு, துஷ்பிரயோகங்கள் தம்மீது வீசியுள்ளனர் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
பிரதமர் மோடியின் பேச்சை கிண்டல் செய்துள்ள முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "பிரதமர் தன்னைப் பற்றி பேசுவதற்கு பதிலாக, இதுவரை கர்நாடக மாநிலத்திற்காக பாஜக அரசாங்கம் செய்துள்ள பணிகள் மற்றும் கர்நாடகத்திற்கான எதிர்கால திட்டங்கள் குறித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
உங்களை பற்றி பேசவேண்டாம் மக்களை பற்றி பேசுங்க: ராகுல் காந்தி
"நீங்கள் (பிரதமர் மோடி)கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறீர்கள். ஆனால் கர்நாடகத்தைப் பற்றி பேசுவது இல்லை. ஆனால் நீங்கள் (பிரதமர் மோடி) உங்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக கர்நாடகாவில் என்ன செய்தீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளில் நீங்கள் என்ன செய்வீர்கள்? இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் ஊழலுக்கு எதிராக நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது பற்றி உங்கள் தேர்தல் உரைகளில் பேச வேண்டும்" என்று ராகுல்காந்தி வேண்டுகோள் வைத்துள்ளார்.
துமகுரு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகையில், "இந்தத் தேர்தல் உங்களைப் பற்றியது அல்ல. இது கர்நாடக மக்கள் மற்றும் அதன் எதிர்காலத்தைப் பற்றியது. காங்கிரஸ் உங்களை 91 முறை துஷ்பிரயோகம் செய்தது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் கர்நாடகாவிற்கு என்ன செய்தீர்கள் என்பது பற்றி பேசவே இல்லை. உங்கள் அடுத்த தேர்தல் உரையில், நீங்கள் என்ன செய்தீர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதைப் பற்றி பேச வேண்டும்.
ராகுல் காந்தியிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்: பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஞாயிற்றுக்கிழமை அன்று, துஷ்பிரயோகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு பதிலளித்த அவர், பொது வாழ்க்கையில் இதுபோன்ற தாக்குதல்களை ஒருவர் தாங்கிக்கொள்ள வேண்டும். மேலும் பிரதமர் மோடி தனது சகோதரர் ராகுல் காந்தியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும் படிக்கவும் - இலவச காஸ் சிலிண்டர்... தினமும் அரை லிட்டர் நந்தினி பால்... பாஜக தேர்தல் அறிக்கை!
என்மீது 91 முறை அவதூறுகளை வீசியுள்ளனர்: பிரதமர்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னை நோக்கி ‘விஷப் பாம்பு’ என்று திட்டியதாகக் கூறிய பிரதமர் மோடி, இதுவரை கட்சியும் அதன் தலைவர்களும் 91 முறை பல்வேறு வகையான அவதூறுகளை தம்மீது வீசியுள்ளனர் என்று சனிக்கிழமை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் நடைபெறும். எனவே அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநில சட்டபை தேர்தல் விவரங்கள்:
- கர்நாடக மாநில சட்டபை எண்ணிக்கை: 224
- கர்நாடகவில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள்: 113
- கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறும் நாள்: மே 10
- கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மே 13
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ