குட்டகப்பள்ளி தொகுதியில் போட்டியிடும் Jr NTR-ன் சகோதரி...

தெலுங்கு திரையுலக பிரபலம் Jr NTR-ன் சகோதரி நந்தமௌரி சுஹாசினி தெலுங்கானாவின் குட்டகப்பள்ளி தொகுதியில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Nov 16, 2018, 03:28 PM IST
குட்டகப்பள்ளி தொகுதியில் போட்டியிடும் Jr NTR-ன் சகோதரி... title=

தெலுங்கு திரையுலக பிரபலம் Jr NTR-ன் சகோதரி நந்தமௌரி சுஹாசினி தெலுங்கானாவின் குட்டகப்பள்ளி தொகுதியில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒருங்கினைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் NTR-ன் மகன் ஹரிகிருஷ்ணா சமீபத்தில் சாலை விபத்தில் மரணித்தார். தற்போது தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக வளம் வரும் Jr NTR-ன் தந்தையான இவர், பலியான நிலையில் அவரது தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஹரிகிருஷ்ணாவின் குடும்ப உறுப்பினர் ஒருவரை அரசியல் களத்தில் இறக்கவுள்ளனர்.

முன்னதாக அவரது மூத்த மகன் நந்தமௌரி கல்யாண்ராம் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் திரைப்பட வேலைகளில் பிஸியாக இருப்பதாலும், அரசியல் வட்டாரத்தில் அவர் பரிட்சையமற்றவர் என்பதாலும் கைவிடப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து அவரது சகோதரி நந்தமௌரி சுஹாசினி குட்டகப்பள்ளியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஒப்புதலின் பேரில் சுஹாசினி குட்டகப்பள்ளி தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது.

ஹரிகிருஷ்ணாவின் மறைவுக்கு பின்னர் அவரது குடும்பத்தார் சந்திரபாபு நாயுடுவிற்கு உதவ முன்வந்துள்ளனர், எனினும் ஹரிகிருஷ்ணாவின் சகோதரி தகுபதி புரண்டேஸ்வரி பாஜக கட்சில் இருந்து தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக விமர்சனங்களை வைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News