சீனாவைப் புறக்கணிக்கும் முயற்சியில், ஜீ நியூஸ் சேனலின் மேட் இன் இந்தியா (Made In India) பிரச்சாரத்தில் இணைய, 7834998998 என்ற எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுக்கவும்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15 அன்று, லைன் ஆஃப் ஆக்சுவல் கண்டோல் (LAC) பகுதியில் சீனப் படையினருடன் ஏற்பட்ட வன்முறை மோதல்களுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பதற்றம் அதிகரித்தது.
ALSO READ | டிக் டாக் மற்றும் பிற சீன செயலிகள் மீது அரசு தடை விதித்துள்ளதன் தாக்கம் என்ன..!!!
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், Zee News செவ்வாயன்று, தங்கள் கருத்தை வெளிப்படுத்த உதவும் வகையில், தனது நேயர்களுக்கு, ஒரு தளத்தை வழங்க முடிவு செய்தது, இதன் மூலம் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) சீனப் படையினருடன் ஏற்பட்ட வன்முறை மோதல்களில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பதற்றம் அதிகரித்தது. அதனால், சீன பெருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் எலோர் மனதிலும் உருவானது. பல இடங்களில் இதற்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டன.
இந்த Made In India பிரச்சாரத்தில், அனைவரும் பங்கேற்று, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தலாம். உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யலாம். இதற்காக, ஜீ நியூஸ் (Zee News) 7834998998 என்ற இந்த எண்ணை உங்களுக்காக கொண்டு வந்துள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை புறக்கணிக்கவும் மேட் இன் இந்தியா பிரச்சாரத்தை விளம்பரப்படுத்தவும் விரும்பும் எவரும் இதற்கு மிஸ்ட் கால் வழங்கலாம். இது சீனாவுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தளம் எனறு கூறலாம்.
இந்தியா தற்சார்பு அடைய வேண்டும் என்றால் சீன தயாரிப்புகளை (Made In China) சந்தையில் தோற்கடிக்க வேண்டும். இதற்கு மேட் இன் இந்தியா தயாரிப்புகளுக்கு நாம் அதிக ஆதரவு தர வேண்டும். இது தவிர, நேயர்கள் #Made In India என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்து ஜீ நியூஸுக்கு உங்கள் ஆதரவை தரலாம்.
ALSO READ | விண்வெளி வீரர்கள் சந்திக்கும் கழிப்பறை பிரச்சனையை தீர்க்க NASA முயற்சி...!!!
உங்களில் சிலர் இந்த எண்ணுக்கு மிஸ்ட் கால கொடுக்கும், ரிங் டோன் கேட்காமல் இருக்கலாம். இதனால் உங்கள் மிஸ்ட் கால் பதிவு செய்யப்படவில்லை என்று அர்த்தமல்ல. இது வரை 30 லட்சத்திற்கு மேற்பட்ட மிஸ்ட் கால்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ்ட் கால் கொடுத்த உடன், ஜீ நியூஸிலிருந்து அவர்களின் மொபைல் தொலைபேசிக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். மிஸ்ட் கால் மூலம் நீங்கள் கொடுத்துள்ள ஆதரவு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான சான்று இது . இந்த SMS இல் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் ஒரு கருத்து கணிப்பிலும் பங்கேற்கலாம். சீனாவுக்கு எவ்வாறு பதிலடி கொடுக்கலாம் என்பது தொடர்பான உங்கள் கருத்தை பதிவு செய்யலாம். இணைப்பைக் கிளிக் செய்தவுடன், இதற்கான கேள்விகள் அடங்கிய பக்கத்திற்ஞ்கு சென்று, உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
ALSO READ | தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்த காங்கிரஸ்... லடாக் கவுன்சிலர் அதிர்ச்சி தகவல்...!!!
இது சீனாவுக்கு எதிரான பதிலடி தொடர்பான மிகப்பெரிய கருத்துக் கணிப்பாக இருக்கும். இது செயற்கை நுண்ணறிவு அதாவது Artificial Intelligence (AI) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆய்வு. இங்கே Chat என்றால் உரையாடல் என்றும் Bot என்றால் ரோபோ என்றும் பொருள், உங்களுடன் பேசக்கூடிய Robot. எனவே, நீங்களும் இந்த ChatBot உதவியுடன் உங்கள் கருத்தை பதிவு செய்யலாம்.
உலகளவில், அதிக எண்ணிக்கையிலான தொலைபேசி அழைப்புகளைக் கையாளும் எந்த தொழில்நுட்பமும் நிமிடத்திற்கு அதிகபட்சம் 5,000 அழைப்புகளை கையாள முடியும். ஜீ நியூஸின் பிரச்சாரத்திற்கு அதிகபட்ச அளவில் மிஸ்ட் கால் வந்துள்ளது. அதனால், சிலருக்கு மிஸ்ட் கால் கொடுக்க முடியாமல் போகலாம். பொறுமையாக மீண்டும் முயற்சிக்கவும். ஏனெனில் இந்த பிரச்சாரம் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சி ஆகும்.
இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 137 கோடியாக உள்ளது. இந்த நிலையில் அனைத்து இந்தியர்களும் சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பினால், அது உலகம் முழுவதும் எதிரொலிக்கும். சீனாவைப் பற்றி இந்தியர்கள் நாம் என்ன நினைக்கிறோம் என்பதை முழு உலகிற்கு கேட்க வைக்கலாம். இந்தியாவின் உண்மையான சக்தியை வெளிப்படுத்தலாம்.
சீனா தற்போது இந்தியாவுக்கு எதிராக ஒரு போரை நடத்தி வருகிறது, அது நாட்டின் மக்களின் ஆதரவு இல்லாமல் போராட முடியாது. எனவே, இந்த பொறுப்பை நீங்கள் இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் தோள்களில் மட்டும் சுமத்த விரும்புகிறீர்களா அல்லது அதில் ஒரு வலுவான பங்கை வகிக்க விரும்புகிறீர்களா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.