வேலையின்மை காரணமாக ஹதரபாத் வாலிபர் தற்கொலை!

ஹைதரபாத் மாநிலம் செகந்திராபாத் பகுதியை சேர்ந்த இளைஞர் வேலையின்மை காரணமாக மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்!

Last Updated : Jan 28, 2018, 07:18 PM IST
வேலையின்மை காரணமாக ஹதரபாத் வாலிபர் தற்கொலை! title=

ஹைதரபாத் மாநிலம் செகந்திராபாத் பகுதியை சேர்ந்த இளைஞர் வேலையின்மை காரணமாக மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்!

நேற்று மாலை 3.45 மணியளவில் நடைப்பெற்ற இச்சம்பவத்தில், பொறியியல் படிப்பில் கணினி தொழில்நுட்ப பிரிவில் தேர்ச்சி பெற்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

பலியானவர் பெயர் ரவி எனவும், அமெரிக்காவில் வேலை பார்த்து பின்னர் தாயகத்தில் பணிபுரிய விரும்பி அவர் இந்தியா வந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் வேலையின்மை காரணமாக இவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது.

இதனால் அடிக்கடி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இவர் தனது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

எனினும் காவல்துறையினர் இச்சம்பவத்தை தற்கொலை என்று கூறும் அளவிற்கான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News