ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதல் பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
பயங்கரவாதிகள் புல்வாமா மாவட்டத்தின் பஸ் ஸ்டாண்டிற்கு அருகே போலீசார் குழு மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். மேலும் அவர்கள் மீது குண்டுகளை வீசினர். பின்னர் அந்த இடத்தை விட்டு வெளியேறினர் பயங்கரவாதிகள்.
இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 7 சிஆர்பிஎஃப் ஊழியர்கள் காயமடைந்தனர். மேலும் வெடிகுண்டு தாக்குதலால் பொதுமக்கள் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் இராணுவ வீர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.