ஜார்க்கண்ட்: நிலக்கரி சுரங்கம் சரிந்தது 7 பேர் பலி

Last Updated : Dec 30, 2016, 02:19 PM IST
ஜார்க்கண்ட்: நிலக்கரி சுரங்கம் சரிந்தது 7 பேர் பலி title=

ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்து இதுவரை 7 பேர் பலி. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் லால்மாதியா நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் சிக்கயுள்ளனர். இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பலி 

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விபத்து நேரிட்ட பகுதிக்கு விரைந்து உள்ளனர். என்டிஆர்எப் வீரர்கள் விபத்து நேரிட்ட பகுதிக்கு மதியம் விரைவார்கள் என்று தகவல் வந்துள்ளது. 

கோட்டா மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் நுழைவு வாயில் சரிந்து விழுந்து. இதில் சுமார் 50 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர் என தெரிகிறது. 

இரவு முழுவதும் பனிமூட்டம் இருந்தது காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இன்று காலை முதல் மீட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சுரங்கம் சுமார் 200 மீட்டர் ஆழம் உடையது.

ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரி ரகுபர் தாஸ் நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறார், மீட்பு பணியினை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். 

Trending News