டெல்லி: ராஜ்தானி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

Last Updated : Sep 14, 2017, 09:07 AM IST
டெல்லி: ராஜ்தானி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து title=

டெல்லி ரயில் நிலையத்தில் ராஜ்தானி விரைவு ரயிலின் கடைசிப் பெட்டி தடம்புரண்டு விபத்துள்ளானது. ஜம்மு - டெல்லி சென்ற ராஜ்தானி ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்து. 

இன்று காலை 6:20 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தில் வந்து நின்றபோது கடைசிப் பெட்டி தடம்புரண்டு விபத்துள்ளானது. இந்த ரயில் விபத்தில் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

முன்னதாக கடந்த செப்டம்பர் 7-ம் தேதி அன்று ராஞ்சி விரைவு ரயில் டெல்லியில் உள்ள மின்டோ பாலம் அருகில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது குறிபிடத்தகது.

Trending News