சர்தார் பட்டேலின் கனவு நிறைவேற்றப்பட்டது -அமித் ஷா பெருமிதம்!

இந்தியாவுடன் முழுமையாக இணைக்கவே ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Last Updated : Aug 24, 2019, 09:50 PM IST
சர்தார் பட்டேலின் கனவு நிறைவேற்றப்பட்டது -அமித் ஷா பெருமிதம்! title=

இந்தியாவுடன் முழுமையாக இணைக்கவே ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-னை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்னும் இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் சர்தார் பட்டேலின் கனவு நிறைவேற்றியுள்ளதாக பாஜக தெரிவித்து வந்தது.

இந்நிலையில் இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீரை முழுமையாக இணைக்கவே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் IPS அதிகாரிகளாக தேர்வானவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமித் ஷா, "சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் ஜம்மு- காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நாடாளுமன்றம் அங்கீகரித்துவிட்டது.

சமஸ்தானங்களாக பிரிந்திருந்த இந்திய நாட்டை நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் ஒருங்கிணைத்தார். ஜம்மு- காஷ்மீர் மட்டும் அப்போது விடுபட்டு விட்டது. தற்போது அந்தக் குறை நீங்கியுள்ளது.

இந்தியா நாடு பயங்கரவாதம், போதை பொருள் கடத்தல் மற்றும் சைபர் கிரைம் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிபட்டு வருகிறது. ஆகவே இந்தப் பிரச்னைகளுக்கு உள்நாட்டில் தீர்வு காணாமல் இந்தியா வளர்ந்த நாடாக உருவேடுக்க முடியாது" எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்., இதுவரை 33,000 காவல்துறை அதிகாரிகள் தேசத்துக்காக தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர். தேசத்தின் மாபெரும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக காவலர்களின் தியாகம் மாறப் போவதாகக் குறிப்பிட்டார்.

பயங்கரவாதம், போதைப்பொருள், சைபர் குற்றம் மற்றும் அண்டை நாடுகளால் உருவாக்கப்பட்ட சவால்கள் போன்ற உள்நாட்டு பாதுகாப்புக்கு நாடு பல சவால்களை எதிர்கொண்டதாக குறிப்பிட்ட ஷா, இந்தியாவை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் மோடியின் பார்வையை அடைய அமைதியும் பாதுகாப்பும் அவசியம் என்று கூறினார்.

Trending News