ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழா அரங்கம் பலத்த மழையால் சேதம்

பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழா அரங்கம் சேதமடைந்தது!

Last Updated : May 30, 2019, 09:03 AM IST
ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழா அரங்கம் பலத்த மழையால் சேதம் title=

பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழா அரங்கம் சேதமடைந்தது!

ஆந்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 175 தொகுதிகளுக்கு 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஜெகன்மோகன் ரெட்டி இன்று அந்த மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். விஜயவாடாவில் நடக்கவிருக்கும் இந்த பதவியேற்பு விழாவிற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக அரங்க ஏற்பாடுகள் பெருமளவு சேதமடைந்தது. இன்று மதியம் 12.23 மணியளவிற்கு ஆளுநர் நரசிம்மன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பதவி பிரமானம் செய்து வைக்க இருக்கிறார். இதையடுத்து அரங்க சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

 

Trending News