இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் மோதலில், பாலஸ்தீனத்தின் பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் ஜெருசலேம் நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியது. ஆனால், இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பான Iron Dome மூலம் ஹமாஸ் வீசிய ராக்கெட்டுகள் தடுத்து நிறுத்தப்பட்டதால், பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.
ஆனால், இஸ்ரேல் நாட்டில் பணியாற்றி வந்த கேரளாவின் இடுக்கி பகுதியைச் சேர்ந்த 31வயதான சௌமியா சந்தோஷ் என்பவர இந்த தாக்குதலில் உயிர் இழந்தார். வயதானவர்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டிருந்த இவர் ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாத தாக்குதலில் பலியானார். தாக்குதலின் போது சவுமியா, தனது கணவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததாக அவரது உறவினர்கள் கூறினர்.
அவரது உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு இன்று காலை கொச்சியை அடைந்தது. அவரது இறுதி சடங்குகள் இடுக்கியில் அவரது இல்லத்தின் நடைபெற்றது. இந்நிலையில், தென்னிந்தியாவுக்கு இஸ்ரேலின் துணைத் தூதர் ஜொனாதன் சட்கா, இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலின் போது உயிர் இழந்த கேரள பெண் சவுமியா சந்தோஷின் குடும்பத்திற்கு சென்று, இரங்கல் தெரிவித்துள்ளார்.
ALSO READ | Watch: இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் தகர்ந்த அல்ஜசீரா, பிற ஊடகங்களின் 12 மாடி கட்டிடம்
மேலும், இஸ்ரேல் தூதர், புகைப்படங்களுடன், இரங்கல் செய்தி ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்
Honoured to pay my respects & convey our sympathies to the family and friends of Ms. Soumya Santosh as she was laid to rest in her home town Keerithod, #Kerala.
May she R.I.P our prayers are with the family that lost an angel in a cowardly #hamasterror attack. pic.twitter.com/CoeH0haOWn— Jonathan Zadka (@Jonathan_Zadka) May 16, 2021
ALSO READ | இஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நாடுகள்; மூன்றாம் உலகப்போர் மூளுமா
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR