ரயில் பயணிகளின் சிரமத்தை போக்க வருகிறது புதிய வசதி!

ரயில் பயணிகளின் சிரமத்தினை போக்க, இந்திய ரயில்களில் இனி குறைந்தது 10 POS இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது!

Last Updated : May 8, 2018, 10:49 AM IST
ரயில் பயணிகளின் சிரமத்தை போக்க வருகிறது புதிய வசதி! title=

ரயில் பயணிகளின் சிரமத்தினை போக்க, இந்திய ரயில்களில் இனி குறைந்தது 10 POS இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது!

ரயில் பயணத்தின் போது ரயிலில் வழங்கப்படும் உணவுகளை வாங்குவதர்கள் தங்கள் கைகளில் எப்போதும் பணம் வைத்திருத்தல் அவசியமாகிறது. அதற்கான சில்லைறை இல்லையெனும் போதும், அல்லது பணமாக இல்லாமல் பற்று அட்டை அல்லது கடன் அட்டை மூலம் பொருட்களை வாங்கும் நபர்கள் தொடர்ந்து அவதிப் பட்டு தான் வருகின்றனர்.

பயணிகளின் இந்த அவதியினை போக்கும் வகையினில் ரயில்களில் POS இயந்திரங்களை பயன்படுத்தி பயணிகளிடம் பணம் பெற வழிவகை செய்யும் வகையில் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதற்கான சுற்றரிக்கையினை IRCTC அனைத்து மண்டல ரயில்வே துறைகளுக்கும் அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவது,... இந்திய ரயில்களிலு இனி குறைந்தது 10 POS இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்., மேலும் பொருட்களை வாங்கும் பயணிகளுக்கு ரசீதினை வழங்குதல் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை ரயில்வே உணவக ஒப்பந்ததாரர்கள் செயல்படுத்துகின்றனரா இல்லையா என்பது குறித்து ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட ரயில் மண்டலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக இம்மாத முற்பகுதியில், IRCTC மொபைல் செயலியினை பயன்படுத்தி பயணிகள் தங்கள் உணவுகளை பெருகையில் அதிக அளவு சிரமத்தினை சந்தித்தாக கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது!

Trending News