காஷ்மீரின் அனைத்து மாவட்டத்திலும் இணைய கியோஸ்க்கள்!

இயல்பு நிலைக்கு திரும்பும் ஜம்மு காஷ்மீரின் அனைத்து மாவட்டத்திலும் இணைய கியோஸ்க்கள் அமைக்கப்பட்டுள்ளன!

Last Updated : Sep 7, 2019, 11:52 AM IST
  • ஜம்மு-காஷ்மீரில் நிலைமையை மேம்படுத்தும் நோக்கில், மக்களின் நடமாட்டத்தை எளிதாக்குவதற்கான தடைகளை தளம் தளர்த்தியுள்ளது.
  • எந்தவித தடையும் இன்றி செயல்பட்ட 105 காவல் நிலையங்களில் 82 தவிர, மேலும் 11 காவல் நிலையங்களில் உள்ள கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
காஷ்மீரின் அனைத்து மாவட்டத்திலும் இணைய கியோஸ்க்கள்! title=

இயல்பு நிலைக்கு திரும்பும் ஜம்மு காஷ்மீரின் அனைத்து மாவட்டத்திலும் இணைய கியோஸ்க்கள் அமைக்கப்பட்டுள்ளன!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் தீவிர முயற்சிகளில், புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இணைய கியோஸ்க்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னாள் மாநிலத்தில் 370-வது பிரிவு மற்றும் 35A பிரிவு ரத்து செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாரா மற்றும் ஹண்ட்வாரா மாவட்டங்களில் அனைத்து லேண்ட்லைன் இணைப்புகளையும் மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது. மொபைல் போன் சேவைகளை செயல்படுத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்டங்களுடன், ஸ்ரீநகரில் உள்ள சுற்றுலா வரவேற்பு மையத்திலும் (TRC) இணைய கியோஸ்க் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ANI செய்தி நிறுவனம் குப்வாரா மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணைய கியோஸ்க் அமைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது.

இணைய வசதியுடன், அரசு துறைகளில் உள்ள பணியாளர்கள் மின்-உத்தியோகபூர்வ பணிகளை மேற்கொள்ள முடியும் மற்றும் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நுழைவு படிவங்களை நிரப்பலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் நிலைமையை மேம்படுத்தும் நோக்கில், மக்களின் நடமாட்டத்தை எளிதாக்குவதற்கான தடைகளை தளம் தளர்த்தியுள்ளது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாவட்ட நீதவான் ஷாஹித் சவுத்ரி மேலும் 29 லேண்ட்லைன் இணைப்புகள் மீட்டெடுக்கப்பட்டதாக அறிவித்தார். 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் எந்தவித தடையும் இன்றி செயல்பட்ட 105 காவல் நிலையங்களில் 82 தவிர, மேலும் 11 காவல் நிலையங்களில் உள்ள கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் லேண்ட்லைன், மொபைல் போன் சேவைகள் மற்றும் இணையம் இடைநிறுத்தப்பட்டது, தற்போது படிபடியாக மீண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை திரும்ப பெறும் விதமாக சட்டப்பிரிவு 370-னை ரத்து செய்வதற்கான முடிவை அறிவித்தது. மேலும் ஜம்மு-காஷ்மீரினை, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் முடிவையும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

370 வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவைத் தொடர்ந்து பிராந்தியத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்காக ஜம்மு-காஷ்மீரில் மொபைல், லேண்ட்லைன் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியிருந்தது.

Trending News