MPக்களின் ரயில் பயணத்திற்கு அரசு செய்த செலவு எவ்வளவு; RTI மூலம் வெளியான தகவல்

2017-18 முதல் 2021-22  வரையிலான 5 ஆண்டுகளில், தற்போது உள்ள எம்.பி.க்களின் பயணம் தொடர்பாக  ரூ.35.21 கோடியும், முன்னாள் எம்.பி.க்களின் பயணத்துக்கு ரூ.26.82 கோடியும் அரசு செலவு செய்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 30, 2022, 09:06 PM IST
MPக்களின் ரயில் பயணத்திற்கு அரசு செய்த செலவு எவ்வளவு; RTI மூலம் வெளியான தகவல் title=

முன்னாள் மற்றும் இன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரயில்களில் இலவசப் பயணத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசுக்கு ரூ.62 கோடி செலவாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, உலகளாவிய கொரோனா தொற்றுநோய்களின் போது, ​​2020-21 ஆம் ஆண்டில் இது போன்ற பயணங்களுக்கு சுமார் 2.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

பதவியில் இருக்கும் எம்.பி.க்கள் முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட வகுப்பிலோ அல்லது ரயில்வேயின் எக்ஸிகியூட்டிவ் வகுப்பிலோ இலவசப் பயணம் செய்யத் தகுதியுடையவர்கள். அவர்களது மனைவிகளும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இலவசமாகப் பயணம் செய்யலாம். முன்னாள் எம்.பி.க்களும் ஏசி-2 அடுக்குகளில் தங்கள் துணையுடன் அல்லது தனியாக ஏசி-1 அடுக்கில் இலவசமாகப் பயணம் செய்யத் தகுதியுடையவர்கள்.

 மத்தியப் பிரதேசத்தின் ஆர்டிஐ ஆர்வலர் சந்திரசேகர் கவுர் இது குறித்து தகவல் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த மக்களவைச் செயலகம், 2017-18 மற்றும் 2021-22ஆம் ஆண்டுகளில் தற்போதைய எம்.பி.க்கள் பயணம் செய்ததற்காக ரூ.35.21 கோடியும், முன்னாள் எம்.பி.க்களின் பயணத்துக்கு ரூ.26.82 கோடியும் ரயில்வேயிடம் இருந்து பில் வந்ததாக தெரிவித்தது.

மேலும் படிக்க | மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார்!

2020-21 ஆம் ஆண்டில் தொற்றுநோய் பரவல் தொடங்கியதில் எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களும் ரயில்வே பாஸைப் பயன்படுத்தியுள்ளனர், அவர்களின் பில்கள் முறையே ரூ.1.29 கோடி மற்றும் ரூ.1.18 கோடி என்று ஆர்டிஐ பதில் கூறியது. மூத்த குடிமக்கள் உட்பட பல்வேறு வகை பயணிகளுக்கு வழங்கப்பட்ட பல சலுகைகளுக்கு ரயில்வே தடை செய்துள்ளது. இதனால் சில பிரிவினர் அதிருப்தியில் உள்ளனர். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு சலுகை நிறுத்தப்பட்ட நடவடிக்கையும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News