அமெரிக்காவில் படித்து வந்த சரத் கோபு என்கிற இந்திய மாணவர் ஓட்டலில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநில வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த சரத் கோபு அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து வருகிறார்.
நேற்று இரவு 7 மணியளவில் இவர் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அங்குள்ள உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
Looking for this suspect in the robbery & murder of 25-y.o. Sharath Kopuu at 5412 Prospect last night. Sharath was from India and is a student at UMKC. $10,000 reward for info leading to charges in this (& every KCMO murder) https://t.co/qUxkcItwXf
— Kansas City Police (@kcpolice) July 7, 2018
சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸ் ரத்த வெள்ளத்தில் கிடந்த சரத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சரத்தை சுட்டது யார் என்பது குறித்தும், அதற்கு காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சரத்தை சுட்டு கொலை செய்த குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்கள் 10,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
தற்போது சரத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய தூதரகம் உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.