அனகொண்டா ஸ்டைலில் ரயில்.... அமர்க்களப்படுத்திய இந்தியன் ரயில்வே

சரக்கு ரயில்களின் போக்குவரத்து நேரத்தைக் குறைக்க மூன்று ரயில்களை ஒன்றாக இணைத்து அனகொண்டா உருவில் ஓட்டியது இந்தியன் ரயில்வே. பல வகையான புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வரும் இந்திய ரயில்வே இதன் மூலம் சாதனை செய்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 1, 2020, 03:08 PM IST
    1. தென்கிழக்கு மத்திய ரயில்வே (எஸ்.இ.சி.ஆர்), மூன்று ரயில்களை ஒன்றாக இணைத்து, 'அனகோண்டா' ஸ்டைலில் ஒரு ரயில் வண்டியை உருவாக்கி, ஓட்டியுள்ளது.
    2. பிலாஸ்பூர் (Bilaspur) மற்றும் சக்ரதர்பூர் (Chakrathpur) பிரிவுகளுக்கு இடையே ஓட்டம்.
    3. பசுமை இந்தியாவிற்கான ஒரு முன்முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
அனகொண்டா ஸ்டைலில் ரயில்.... அமர்க்களப்படுத்திய இந்தியன் ரயில்வே title=

புதுடெல்லி: உலகளவில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவை (India) இணைக்கும் முக்கிய அம்சங்களில், நம் ரயில்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்திய ரயில்வே பல பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்கி, நாடு முழுவதும் மக்கள் மற்றும் சரக்குகளின் நேர்த்தியான போக்குவரத்தை சாத்தியப்படுத்தி வருகிறது. அவ்வப்போது, பல புதிய முயற்சிகளை எடுத்து ரயில் போக்குவரத்தின் திறனை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் இந்திய ரயில்வே தற்போதும் அப்படிப்பட்ட ஒரு விஷயத்தைத் தான் செய்துள்ளது.

தென்கிழக்கு மத்திய ரயில்வே (எஸ்.இ.சி.ஆர்), மூன்று ரயில்களை ஒன்றாக இணைத்து, 'அனகோண்டா' போன்ற ஒரு ரயில் வண்டியை உருவாக்கி, ஓட்டியுள்ளது. இவ்வகையில் இந்திய ரயில்வே (Indian Railways) ஒரு சாதனையைச் செய்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. இந்த ரயில்களில் 15000 டன்களுக்கும் அதிகமான சுமை இருந்தது. இவை பிலாஸ்பூர் (Bilaspur) மற்றும் சக்ரதர்பூர் (Chakrathpur) பிரிவுகளுக்கு இடையே ஓடின.

 

ALSO READ: அச்சத்தின் உச்சக்கட்டமாக சீனாவில் தடை செய்யப்பட்டது இந்திய ஊடகங்களுக்கான அணுகல்

 

இந்திய ரயில்வே, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அகௌண்டில் இது குறித்த வீடியோவைப் பகிர்ந்து கொண்டதோடு, 'சரக்கு ரயில்களின் போக்குவரத்து நேரத்தைக் குறைக்கும் நோக்கில், எஸ்.சி.ஆரின் பிலாஸ்பூர் பிரிவு, பளு ஏற்றப்பட்ட 3 ரயில்களை (15000 டன்களுக்கு மேல்) ஒன்றாக இணைத்து, அவற்றை ஓட்டி, புதிய சாதனையை படைத்துள்ளது. பிலாஸ்பூர் மற்றும் சக்ரதர்பூர் பிரிவுகளுக்கு இடையே இணைக்கப்பட்ட இந்த ரயில்கள் 'அனகோண்டா' உருவைப் பெற்றன.' என விவரங்களை குறிப்பிட்டுள்ளது.

இந்த ’சூப்பர் அனகோண்டா' த்ரி-இன்-ஒன் சரக்கு சேவையில் 177 வேகன்கள் மற்றும் 6000 ஹெச்பி திறன் கொண்ட மூன்று மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

முன்னதாக, இந்திய ரயில்வே, ஜூன் மாதத்தில், முதல் டபுள் ஸ்டேக் கண்டெய்னர் ரயிலை, ஓவர்ஹெட் மின்மயமாக்கப்பட்ட பிரிவில் (OHE)செலுத்தி, உலகளவில் புதிய மயில்கல்லை உருவாக்கியது. 

இப்போது இந்திய ரயில்வே செய்துள்ள சாதனை, இந்த வகையில், உலகில் முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கப்பட்டுள்ள ஒன்றாகும். மேலும் பசுமை இந்தியாவிற்கான ஒரு முன்முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. பசுமை இந்தியா (Green India) என்ற புதிய லட்சிய பணித்திட்டத்தை இந்த முயற்சி ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளது. 

Trending News