தமிழர்களின் தனிப்பட்ட அடையாளங்களில் ஒன்றான கோலம் இப்போது உலக அளவில் பார்க்கப்பட்டு பேசப்படுகின்றது. அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக தற்போது அமெரிக்காவின் புதிய அதிபருக்கான பதவி ஏற்பு விழாக்களில் கோலத்திற்கு ஒரு தனி இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆம்!! வரவேற்பின் அடையாளமாக வீடுகளின் வாசல்களில் இடப்படும் பாரம்பரிய இந்திய கலை வடிவமான கோலம், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரின் பதவியேற்பு விழாவின் மெய்நிகர் துவக்க விழாக்களின் ஒரு பகுதியாகியுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாட ஆயிரக்கணக்கான கோலங்களை உருவாக்கும் ஆன்லைன் முயற்சியில் அமெரிக்கா (America) முழுவதிலும் இருந்து 1,800 க்கும் மேற்பட்ட நபர்களும் இந்தியாவில் இருந்து பலரும் பங்கேற்றனர்.
"கோலங்கள் நேர்மறை ஆற்றலையும் புதிய தொடக்கத்தையும் குறிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுடன் இவற்றை தங்கள் வீடுகளிலிருந்து உருவாக்க பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அனைத்து வயதினரும் ஒத்துழைத்தனர். ஒரு உள்ளூர் திட்டமாகத் தொடங்கிய இந்த பணி எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு சென்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது” என்று மேரிலாந்தைச் சேர்ந்த விருது பெற்ற மல்டிமீடியா மற்றும் பலதுறை கலைஞரான சாந்தி சந்திரசேகர் கூறினார். பதவியேற்பு விழாவில் கோலத்தை ஓர் அங்கமாக்கும் முன்முயற்சியை அவர்தான் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நிர்வாகத்திற்கு நல்ல தொடக்கத்தின் அடையாளமாக நாடு முழுவதும் இருந்து வரும் கோலங்களை வெள்ளை மாளிகையின் (White House) முன் வெளிப்படுத்த முதலில் திட்டமிடப்பட்டது. வாஷிங்டன் டி.சி காவல்துறை பின்னர் அமைப்பாளர்களை கேபிடல் ஹில் அருகே, பதவியேற்பு விழா நிகழ்வு நடக்கும் இடத்தை சுற்றி கோலங்கள் உள்ள ஓடுகளை வைக்க அனுமதி அளித்தது.
ALSO READ: சீனாவில் கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்களுக்கு நச்சு குடிநீரை வழங்கல்..
இருப்பினும், வாஷிங்டன் டி.சி.யில் எதிர்பாராத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டதால், இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இதன் விளைவாக, பைடன் மற்றும் ஹாரிஸை ‘அனைவருக்குமான அதிபர்’ என்ற மனப்பான்மையுடன் வரவேற்கவும், அமெரிக்காவின் பல கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும், சனிக்கிழமையன்று கோலங்கள் (Kolam) போடப்பட்ட ஆயிரக்கணக்கான ஓடுகளின் படங்கள் ஒரு வீடியோவாக உருவாக்கப்பட்டன.
உள்ளூர் பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் இந்த கோல ஓடுகளுக்கான இடமும் நாளும் தீர்மானிக்கப்படும் என்று கோலம் 2021 ஏற்பாட்டுக் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் சௌம்யா சோம்நாத் தெரிவித்தார்.
வாஷிங்டன் டி.சி பொதுப் பள்ளிகளின் கலை இயக்குனர் மேரி லம்பேர்ட் மற்றும் விஷுவல் ஆர்ட்ஸ் கலை மேலாளர் லிண்ட்சே வான்ஸ் ஆகியோர் சாந்தி சந்திரசேகருடன் இணைந்து பல்வேறு பின்னணியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களால் போடப்பட்ட கோலங்களை ஒன்றிணைத்து, அமெரிக்க அதிபராக ஜோ பைடன் (Joe Biden) ஒரு சில நாட்களில் பதவியேற்கும்போது அவரை வரவேற்கும் பணிகளில் இவற்றை வெளிகாட்டுவதற்கான பணிகளின் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான கலைஞர்கள், குடிமக்கள் மற்றும் மாணவர்கள் ஆயிரக்கணக்கான கோலங்களை இணைக்க ஆன்லைனில் ஒத்துழைத்தனர்.
கமலா ஹாரிஸ் (Kamala Harris) தமிழ் குடும்பத்தைச் சார்ந்தவர். அவர் வெற்றி பெற்றபோது அவரது சொந்த ஊரில் மக்கள் கோலமிட்டு அந்த வெற்றியைக் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள பத்து பொதுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கோலங்களை உருவாக்கும் பணியில் பங்கேற்றனர்.
தங்கள் எதிர்பார்ப்பை விட அதிக அளவில் மக்கள் இந்த கோலம் பணித்திட்டத்தில் கலந்து கொண்டதாக சௌம்யா குறிப்பிட்டார். கலிபோர்னியா, பாஸ்டன், நியூ ஜெர்சி மற்றும் பல இடங்களிலிருந்து மக்கள் தங்கள் கோலங்களின் ஓடுகளை அனுப்பியுள்ளனர். முதியோர் இல்லங்கள், பகல்நேர கவனிப்பு இல்லங்கள் முதல் 90 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வரை அனைவரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
ALSO READ: வடகொரியா தனது பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு மூலம் அமெரிக்காவை எச்சரிக்கிறதா..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR