SAI: இந்திய ராணுவ வீரர்களுக்கான பிரத்யேக app அறிமுகம்!!

இந்திய இராணுவத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட செய்தியிடல் செயலி பிரதமர் நரேந்திர மோடியின் 'ஆத்மனிர்பர் பாரத்` முழக்கத்திற்கு இசைவாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 30, 2020, 01:50 PM IST
  • இந்திய ராணுவம் SAI என்ற செய்தியிடல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது ராணுவ செய்தி பரிமாற்றத்திற்கான பிரத்யேக செயலியாக இருக்கும்.
  • உள்ளூர் உள்ளக சேவையகங்கள் மற்றும் குறியீட்டுடன் பாதுகாப்பு அம்சங்களை SAI மதிப்பிடுகிறது.
SAI: இந்திய ராணுவ வீரர்களுக்கான பிரத்யேக app அறிமுகம்!! title=

புதுடெல்லி: இந்திய ராணுவம் (Indian Army) SAI என்ற செய்தியிடல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி (App) மூலம் வீரர்களுக்கு பாதுகாப்பான குரல், உரை மற்றும் வீடியோ அழைப்பு சேவைகள் வழங்கப்படும்.

"SAI மாடல், வாட்ஸ்அப், டெலிகிராம், சம்வாத் மற்றும் ஜிம்ஸ் போன்ற வணிகரீதியாக கிடைக்கக்கூடிய செய்தியிடல் செயலிகளுக்கு ஒத்ததானது. இது end-to-end encryption messaging protocol-ஐ பயன்படுத்துகிறது" என்று இந்திய ராணுவம் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இராணுவம் தான் உருவாக்கியுள்ள இந்த செய்தியிடல் செயலிக்கு SAI என பெயரிட்டுள்ளது. இதன் விரிவாக்கம் Secure Application for Internet என்பதாகும்.

ALSO READ: இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரித்த சவுதி அரேபியாவுக்கு கவலை தெரிவித்த இந்தியா..!

"ராணுவத்திற்குள், பாதுகாப்பான செய்தியிடலை எளிதாக்க SAI செயலியை இந்தியா முழுவதும் ராணுவம் பயன்படுத்தும். இந்த செயலி end-to-end secure voice, text மற்றும் voice அழைப்பு வசதிகளை, இணையத்தில் Android தளத்தில் வழங்குகிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட செய்தியிடல் செயலி பிரதமர் நரேந்திர மோடியின் 'ஆத்மனிர்பர் பாரத்` முழக்கத்திற்கு இசைவாக உள்ளது.

இந்த செயலி (app) end-to-end secure voice, text மற்றும் voice அழைப்பு வசதிகளை, இணையத்தில் Android தளத்தில் வழங்குகிறது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“உள்ளூர் உள்ளக சேவையகங்கள் மற்றும் குறியீட்டுடன் பாதுகாப்பு அம்சங்களை SAI மதிப்பிடுகிறது. அவை தேவைகளுக்கு ஏற்ப மாற்றப்படலாம் "என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

"ராணுவ சேவையில் பாதுகாப்பான செய்தியிடலை எளிதாக்க SAI இராணுவப் படைகளால் பயன்படுத்தப்படும். செயலியின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்த பாதுகாப்பு அமைச்சர், இந்த செயலியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்த கொலொனல் சாய் சங்கரின் திறமை மற்றும் புத்தி கூர்மையை பாராட்டினார்," என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ: புல்வாமா தாக்குதல் இம்ரான் கானின் மிகப்பெரிய வெற்றி: பாக். வெளியுறவு அமைச்சர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News