இந்திய விமான படையின் (IAF) மிக் -29 (MiG-29) போர் விமானம், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் (Apache attack helicopter ) ஆகியவை சீனாவுடனான LAC பகுதியில் இரவு ரோந்துப் பணியை மேற்கொள்கின்றன. சென்ற மாதம் கல்வான் பள்ளதாக்கில் (Galwan Valley) நடந்த மோதல்களில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீன துருப்புகள் பின் வாங்கி சென்றுள்ள போதிலும், கல்வான் பகுதியில் இன்னும் சீனாவின் கவச வாகங்கள் உள்ளதால் இராணுவம் எச்சரிக்கை நிலையை கடைபிடித்து வருகிறது.
இந்திய (India) விமான படை கனரக இராணுவ உபகரணங்களை கொண்டு செல்ல C-17 குளோப்மாஸ்டர் III போக்குவரத்து விமானங்களையும், C-130J சூப்பர் ஹெர்குலஸையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.
விமானப்படை ஏற்கனவே Sukhoi 30 MKI, Jaguar, Mirage 2000 ஆகிய விமானங்களை, லே மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல முக்கிய விமான தளங்களுக்கு கொண்டு சென்றுள்ளது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
துருப்புக்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் சினூக் ஹெவி-லிப்ட் ஹெலிகாப்டர்களையும் விமான படை நிறுத்தியுள்ளது. சீன (China) விமானப்படை தனது நடவடிக்கைகளை அதிகரித்ததை தொடர்ந்து ரோந்து பணி அதிகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ALSO READ | PM Modi இன் உத்தரவின் பேரில் NSA Ajit Doval சீனாவுக்கு அனுப்பிய செய்தி இதுவே....
இதற்கிடையில், சீனா தனது துருப்புக்களையும் வாகனங்களையும் கால்வான், ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ரா ஆகிய மூன்று நிலைகளில் இருந்து கிட்டத்தட்ட 1.5 கிலோமீட்டர் தூரம் பின் நோக்கி சென்றுள்ளது.
இருப்பினும், கால்வான் நதிக்கு அருகில் பகுதியில்சீன கனரக கவச வாகனங்கள் இன்னும் உள்ளன. இந்திய இராணுவம் நிலைமையை எச்சரிக்கையுடன் கண்காணித்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இருதரப்பு உடன்படிக்கைகளின் விதிமுறைகளை கடைபிடித்து எல்லைப் பகுதிகளில் அமைதியை விரைவாக ஏற்படுத்தும் என்பதை சீனா உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, இந்தியா தெரிவித்துள்ளது.