மாலத்தீவு அதிபர் தேர்தலில் இப்ராகிம் முகமது அபார வெற்றி..!

மாலத்தீவு அதிபர் தேர்தலில் அப்துல்லா யாமீனை எதிர்த்து போட்டியிட்ட இப்ராகீம் முகம்மது அபார வெற்றி..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 24, 2018, 09:22 AM IST
மாலத்தீவு அதிபர் தேர்தலில் இப்ராகிம் முகமது அபார வெற்றி..!  title=

மாலத்தீவு அதிபர் தேர்தலில் அப்துல்லா யாமீனை எதிர்த்து போட்டியிட்ட இப்ராகீம் முகம்மது அபார வெற்றி..! 

தெற்காசிய நாடான சுமார் 1,192 குட்டித் தீவுகளை கொண்டது மாலத்தீவு. அங்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய, அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இந்த தீர்ப்பை அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்கவில்லை. அதிபர் நிலைப்பாட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனால் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மீதிமிருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விடுதலை உத்தரவை திரும்ப பெற்றனர். 

இத்தகைய அரசியல் குழப்பங்களுக்கு இடையே மாலத்தீல் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் அதிபர் அப்துல்லா யாமீனும், மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் இப்ராகிம் முகமதுவும் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர், உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகளை துவங்கினர். 
 
அதில், துவக்கத்தில் இருந்தே அதிபர் அப்துல்லா யாமீன் பின்னிலையில் இருந்தார். எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டு இருந்த இப்ராகீம் முகம்மது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். மொத்த வாக்காளர்களில் 58.3 சதவீத வாக்குகள் பெற்று இப்ராகீம் முகம்மது வெற்றி பெற்றதாக மாலத்தீவு தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இப்ராகிம் முகமது 1,33,808 ஓட்டுகளும், யாமீன் 95,526 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். 

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த இப்ராகீம் முகம்மது பேசுகையில், மக்களின் விருப்பத்தை மதித்து, மென்மையாகவும், சமாதானமாகவும் அதிகாரத்தை மாற்ற யாமீனை சந்தித்து பேசினேன்” என சுருக்கமாக தனது உடையை முடித்துக்கொண்டார்.

 

Trending News