பாரிஸ் ஒப்பந்த இலக்குடன் இணக்கமான நாடுகளில் இந்தியா: மோடி!!

வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்ற பாரிஸ் ஒப்பந்த இலக்கிற்கு இணங்க சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று மோடி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Feb 17, 2020, 02:15 PM IST
பாரிஸ் ஒப்பந்த இலக்குடன் இணக்கமான நாடுகளில் இந்தியா: மோடி!! title=

வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்ற பாரிஸ் ஒப்பந்த இலக்கிற்கு இணங்க சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று மோடி தெரிவித்துள்ளார்!!

டெல்லி: குஜராத் மாநிலம் காந்திநகரில் இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டை பிரதமா் மோடி, தில்லியில் இருந்து காணொளி மூலம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

சுமார் ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 126 நாடுகளை சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு நிபுணா்கள் பங்கேற்க உள்ளனா். இதில் அழிந்துவரும் விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தொடக்க விழாவில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகரும் பங்கேற்க உள்ளாா்.

இதை தொடர்ந்து, மாநாட்டில் உரையாற்றிய பிரதமா் மோடி கூறுகையில்... இந்தியாவில் கிட்டத்தட்ட 2,970 புலிகள் உள்ளன. 2022 ஆம் ஆண்டின் உறுதிசெய்யப்பட்ட தேதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை இந்தியா அடைந்துள்ளது. பாதுகாப்பு, நிலையான வாழ்க்கை முறை மற்றும் பசுமை மேம்பாட்டு மாதிரியின் மதிப்புகளின் அடிப்படையில் இந்தியா காலநிலை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பாரிஸ் ஒப்பந்த இலக்கின் அடிப்படையில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

இந்தியா உலகின் மிகவும் மாறுபட்ட நாடுகளில் ஒன்றாகும். உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்துடன், உலகளாவிய பல்லுயிரியலில் 8 சதவீதம் பங்களிக்கிறது. பல ஆண்டுகளாக, வனவிலங்குகள் மற்றும் அதன் வாழ்விடங்களைப் பாதுகாப்பது இந்தியாவின் கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். இதனால் இரக்க குணமும், சமூகத்தில் வனவிலங்குகளும், மனிதர்களும் ஒன்றி வாழ ஊக்குவிக்கிறது.

புலம்பெயர்ந்த பறவைகளைப் பாதுகாக்க இந்தியா செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும், "மத்திய ஆசியா ஃப்ளைவேயில் புலம் பெயர்ந்த பறவைகளை பாதுகாக்க இந்தியா ஒரு தேசிய செயல் திட்டத்தை தயார் செய்துள்ளது" என்று அவர் கூறினார். "சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் வளர்ச்சி நடைபெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

 

Trending News