இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி
ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அதன்படி இன்று இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து:-
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:-
My greetings to Fellow Citizens as we complete 70 years of our Independence #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) August 14, 2017
பிரதமர் நரேந்திர மோடி:-
#स्वतंत्रतादिवस के शुभ अवसर पर सभी देशवासियों को बहुत-बहुत बधाई। जय हिन्द! Independence Day greetings to my fellow Indians. Jai Hind.
— Narendra Modi (@narendramodi) August 15, 2017
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி:-
சாதி, மத வேறுபாடு களைந்து நாட்டை வளமிக்கதாக உருவாக்க ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:-
ஜனநாயக காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என்னுடைய 71வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். #IndependenceDayIndia pic.twitter.com/eUEjc0ba2l
— M.K.Stalin (@mkstalin) August 15, 2017
நம் சுதந்திரத்திற்கு எத்திசையிலிருந்தும் ஆபத்து நேர்ந்து விடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் உணர்வுமிக்க உரிமை.
— M.K.Stalin (@mkstalin) August 15, 2017
ஆளுநர் வித்யாசாகர் ராவ்:-
சுதந்திரத்துக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.
கலாச்சாரம், பண்பாட்டை காக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும். தலைவர்களின் வழியை பின்பற்றி நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:-
மாநில சுயாட்சி, மதுவின் பிடியிலிருந்து விடுதலை ஆகியவை எப்போது சாத்தியமாகிறதோ, அப்போதுதான் தமிழக மக்களுக்கு உண்மையான விடுதலை எனக் குறிப்பிட்டுள்ளார். மது அரக்கனை ஒழிக்கவும், மாநில சுயாட்சிக்காக போராடவும், அமைதி, வளம், சமத்துவம் மற்றும் சமூக நீதியை வளர்க்கவும், சுதந்திர தின நன்னாளில் உறுதி ஏற்போம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-
சுதந்திரத்திற்காக இன்னுயிரை ஈந்தவர்களின் தியாக உணர்வுகளை என்றென்றும் போற்றி வணங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட வேண்டுமென வலியுறுத்தி உள்ள திருநாவுக்கரசர், புதிய பாரதத்தை படைத்திட, சுதந்திர தின நாளில் உறுதியேற்போம்.