புதுடில்லி: உத்தரபிரதேசத்தின் முராத்நகரில் உள்ள மயானம் ஒன்றில் கூரை இடிந்து விழுந்ததில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தது பதினேழு பேர் உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய மொத்தம் 38 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
“முராத்நகரில் மாயனத்தில் உள்ள ஒரு கொட்டகை இடிந்து விழுந்ததில், 17 பேர் இறந்தனர்; 38 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ”என்று மீரட்டின் மாவட்ட ஆட்சியர் அனிதா சி மெஷ்ராம் ANI இடம் கூறினார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) சம்பவம் குறித்த தகவல் கிடைத்த உடன் "நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சம்பவம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் நான் மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். துயர சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்று கூறினார்.
UP CM Yogi Adityanath takes cognizance of roof collapse incident in Muradnagar, Ghaziabad district.
"I've instructed district officials to conduct relief operations & submit a report of incident. All possible help will be provided to those affected by the incident," he said. pic.twitter.com/3Kt6ECqIz7
— ANI UP (@ANINewsUP) January 3, 2021
போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு NDRF தற்போது விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தில்லி (Delhi) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை பெய்த போது, மயானத்தில் உள்ள இந்த கொட்டகையின் கீழ் சிலர் தஞ்சம் புகுந்தனர். அப்போது கொட்டகை இடிந்து விழுந்து இந்த துயர சம்பவம் நேரிட்டுள்ளது.
ALSO READ | COVAXIN - COVISHIELD: செயல்திறன், விலை பிற விபரங்கள்..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR