காலா பானி சிறையில்; மறைந்த தியாகிகளுக்கு மோடி அஞ்சலி!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அவர்கள் ரூபாய் 50 கோடி மதிப்பில் தடுப்பு சுவர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்!

Last Updated : Dec 30, 2018, 06:49 PM IST
காலா பானி  சிறையில்; மறைந்த தியாகிகளுக்கு மோடி அஞ்சலி! title=

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அவர்கள் ரூபாய் 50 கோடி மதிப்பில் தடுப்பு சுவர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்!

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் உள்ள 3 சிறிய தீவுகளின் பெயர்களை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்வைத்து பிரதமர் மோடி அந்தமான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அந்தமான் சென்றுள்ள பிரதமர் மோடி கார் நிக்கோபார் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க 50 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் கடந்த 2004-ம் ஆண்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளை தாக்கிய சுனாமி பேரலையில் சிக்கி இறந்தவர்களுக்கு கார் நிக்கோபார் நகரில் அமைந்துள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து வெள்ளையர் ஆட்சி காலத்தில் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். வெள்ளையர்கள் ஆட்சி காலத்தின் போது மகாத்மா காந்தி தலைமையிலான சுதந்திர போராட்ட முக்கிய தலைவர்களை அன்றைய ஆட்சியாளர்கள் அந்தமான் தீவுக்கு கப்பலில் அனுப்பி, அங்குள்ள தனிமை சிறையில் அடைத்துவைத்து சித்ரவதைப்படுத்தினர். காலா பானி என்றழைக்கப்படும் இந்த சிறையில் சுதந்திர போராட்ட தியாகிகளில் சிலருக்கு முன்னர் தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கார் நிக்கோபார் நிகழ்ச்சியின் போது அங்கு கூடியிருந்த மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது., அந்தமானில் இன்னும் கூட்டுக் குடும்பமுறை கடைபிடிக்கப்படுவதற்கு மகிழ்ச்சி என தெரிவித்தார். மேலும் அந்தமானில் உள்ள மக்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 1943-ம் ஆண்டு நேதாஜி கொடியேற்றிய ஜிம்கானா மைதானத்தில் 150 மீட்டர் கம்பத்தில் தேசிய கொடியேற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

Trending News