இம்ரான் கான் பதவியேற்பு விழா: அமீர், சித்துக்கு அழைப்பு.. மோடிக்கு அழைப்பு இல்லை

வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பலருக்கு அழைப்பு விடுக்கபட்டு உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 1, 2018, 08:43 PM IST
இம்ரான் கான் பதவியேற்பு விழா: அமீர், சித்துக்கு அழைப்பு.. மோடிக்கு அழைப்பு இல்லை title=

272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானின் பொதுதேர்தல் கடந்த ஜூலை 25-ஆம் நாள் நடைப்பெற்றது. இத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் எனப்படும் பிடிஐ கட்சி 116 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சியை அமைக்க 137 இடங்கள் தேவை என்ற நிலையில், இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு இன்னும் 21 இடங்கள் தேவை. இந்நிலையில் சிறிய கட்சிகளுடனும், சுயேச்சை உறுப்பினர்களுடனும் பேச்சு நடத்தி வருவதாக பிடிஐ கட்சி தெரிவித்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் தேதி பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகர் அமிர் கான், முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். 

அண்டை நாட்டு தலைவர்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்து பேசிய பிடிஐ கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபவத் சவுத்ரி கூறியது, வெளிநாட்டு தலைவர்களை பதவியேற்ப்பு விழாவிற்கு அழைப்பது குறித்து ஆலோசித்து பின்னரே முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார். 

 

 

 

Trending News