விரைவில் தனியார் ரயிலை ரயில் தடங்களில் காணலாம்: ரயில்வே துறையின் முக்கிய நடவடிக்கை

மிக விரைவில் தனியார் ரயில்கள் சேவை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே துறை தொடக்கியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 6, 2020, 08:24 PM IST
  • ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதில் முக்கிய நடவடிக்கையை ரயில்வே துறை தொடக்கியுள்ளது.
  • இது தொடர்பான முக்கிய கூட்டம் ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும்.
  • அரசு 2020 செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் தனியார் நிறுவனங்களிடம் விண்ணப்பங்களை வரவேற்கும்.
விரைவில் தனியார் ரயிலை  ரயில் தடங்களில் காணலாம்: ரயில்வே துறையின் முக்கிய நடவடிக்கை title=

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தின் கீழ், RFQ (Request for quotation ) செயல்பாட்டின் கீழ் ஜூலை 16 வரை தனியார்  துறை இது தொடர்பான கேள்விகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

புதுடெல்லி (New Delhi): தனியார் பிளேயர் ரயில் திட்டத்திற்காக இந்திய அரசு ஜூலை 21 ஆம் தேதி  ஏலத்திற்கு முன் நடத்தும் முதல் கூட்டத்தை நடத்துகிறது. ரயில்வேயின் மிக முக்கியமான மற்றும் தனித்துவமான நடவடிக்கையான ரயில்வே துறையில் தனியார் பங்கை ஏற்படுத்தும் ரயில் திட்டத்திற்கான முழுமையான திட்ட வரைபடத்தை ரயில்வே அமைச்சகம் தயார் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | ஜூலை 21 முதல் அமர்நாத் யாத்திரை தொடங்கம், 10000 பக்தர்கள் பயணம் செய்ய அனுமதி...

ஜூலை 16 வரை தனியார் துறையினர் இது தொடர்பான கேள்விகளை அனுப்பலாம். ஜூலை 16 இதற்கான கடைசி தேதி  ஆகும். இதன் பின்னர், ஏலத்திற்கு முன்பு நடத்தப்படும் முதல் கூட்டம் ஜூலை 21 அன்று நடைபெறும்.

ரயில்வே அமைச்சகம் (Railway Ministry) அனைத்து கேள்விகளுக்கும் ஜூலை 31 க்குள் பதிலளிக்க வேண்டும். ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் ஏலத்திற்கு முன்பான மற்றொரு கூட்டத்தை நடத்துகிறது, இதற்காக தனியார் துறையினர் தங்கள் கேள்விகளை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் அமைச்சகத்திற்கு அனுப்பலாம்.

இரண்டாவது முன் ஏல கூட்டத்திற்குப் பிறகு, ரயில்வே அமைச்சகம் அனைத்து கேள்விகளுக்கும் ஆன பதில்களை ஆகஸ்ட் 21 க்குள் அனுப்பும். அரசு 2020 செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் தனியார் நிறுவனங்களிடம் விண்ணப்பங்களை வரவேற்கும்.

ALSO READ | முன்னாள் DSP தேவேந்தர் சிங் மீது UAPA சட்டத்தின் கீழ் NIA குற்ற பத்திரிக்கை தாக்கல்

ரயில்வே அமைச்சின் இந்த திட்டத்தின் படி, விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட 60 நாட்களுக்குள், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அல்லது விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்படும். இதன் பின்னர் ஏலச்சீட்டு செயல்முறை மேற்கொள்ளப்படும். இதனால், மக்கள் மிக விரைவில், தனியார் ரயில்களை ரயில்வே தடங்களில் பார்க்கலாம்.

Trending News