பேங்க் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி, ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு

RBI Bank Locker Rules: வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கான புதிய திருத்தப்பட்ட விதிமுறைகள் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளன. அதன்படி வங்கி லாக்கர் புதிய ஒப்பந்தம் டிசம்பர் வரை கெடு நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 24, 2023, 10:40 AM IST
  • ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை.
  • வங்கி லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி.
  • பேங்க் லாக்கர் ரூல்ஸ் மாறிடுச்சு.
பேங்க் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி, ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு title=

இந்திய ரிசர்வ் வங்கி: நீங்கள் ஏதேனும் பொதுத்துறை வங்கி அல்லது தனியார் வங்கியில் லாக்கரை வைத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும். ஆம், கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் லாக்கர் தொடர்பான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளாது. அதன்படி வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையேயான லாக்கர் ஒப்பந்தம் ஜனவரி 1, 2023க்குள் புதுப்பிக்கப்பட இருந்தது. ஆனால் தற்போது வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையேயான லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான கடைசி தேதியை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்த புதிய விதிமுறைகளை வங்கிகள் செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை இந்தாண்டு டிசம்பர் இறுதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் இறுதி வரை கால கெடு நீட்டிப்பு
புதிய விதிமுறைகள் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்டன. இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தி 2023 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்து பெற அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பதால் விதிமுறைகளை புதுப்பித்தல் செயல்முறையை முடிப்பதற்கான காலக்கெடு வரும் டிசம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ரிசர்வ் வங்கி.

மேலும் படிக்க | வாடிக்கையாளர்களே அலெர்ட்! அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள் திறக்கப்படாது!

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் சார்பில், வரும் ஏப்ரல் 30க்குள் திருத்தப்பட்ட விதிமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரியப்படுத்தி, ஜூன் 30 மற்றும் செப்டம்பர் 30க்குள் முறையே 50 மற்றும் 75 சதவீத வாடிக்கையாளர்களை புதிய விதிமுறைக்கு இணங்கச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டாம்ப் பேப்பர் போன்றவை கிடைப்பதை உறுதிசெய்து திருத்தப்பட்ட ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, ஜனவரி 1, 2023 க்குள் ஒப்பந்தத்தை நிறைவேற்றாததற்காக லாக்கர்களில் செயல்பாடுகள் தடைசெய்யப்பட்ட சந்தர்ப்பங்களில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Budget 2023: மாத சம்பளம் பெரும் நபரா நீங்கள்? பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு, விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News