ரஃபேல் ஊழல் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த டசால்ட் நிறுவன CEO

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களேதான் தேர்வு செய்தோம் என டசால்ட் நிறுவன CEO தகவல்....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2018, 12:57 PM IST
ரஃபேல் ஊழல் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த டசால்ட் நிறுவன CEO  title=

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களேதான் தேர்வு செய்தோம் என டசால்ட் நிறுவன CEO தகவல்....

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்க்கு பாஜக கட்சியினர் பதில் தருவதும் என மாறி மாறி வார்த்தை போர் நடத்தி வந்தனர்.   

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டசால்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராபியர் காங்கிரஸ் தலைவர் ராகுல் ரபேல் விமானம் குறித்து கூறிய புகார்களை நிராகரித்துள்ளது. மேலும், அவர் தான் இந்த விவாரத்தில் பொய் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேட்டியளித்த டசால்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராபியர் கூறியதாவது, ரபேல் போர் விமானங்களை இந்தியாவிற்கு சப்ளை செய்யும் விஷயத்தில் நான் பொய் கூறவில்லை. இந்த விஷயத்தில் நான் கூறியதும், வெளியிட்ட அறிக்கைகளும் முற்றிலும் உண்மையானது. 

சால்ட் நிறுவனத்தின் பங்குதாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது எங்கள் நிறுவனத்தின் முடிவு தான். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மேலும் 30 நிறுவனங்கள் எங்கள் பங்குதாரராக உள்ளன. பாதுகாப்பு முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு தேவையாக உள்ளது.

முதலில் போட்ட ஒப்பந்தத்தின்படி, பறக்கும் நிலையில் 18 விமானங்களை அளிக்க வேண்டும். இரண்டாவது ஒப்பந்தத்தின்படி, 36 விமானங்களை சப்ளை செய்ய வேண்டும். ஆனால், 36 விமானங்களின் விலையும், 18 விமானங்களின் விலையும் ஒன்று தான். விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, விலையும் அதிகரிக்க வேண்டும். 

இது இரு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் என்பதால், விலை குறைப்பு குறித்து பேசப்பட்டது. விமானத்தின் விலையில், 9 சதவீதம் குறைக்க நான் ஒப்புக் கொண்டேன். டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இடையே உருவான பங்கு நிறுவனத்தில் தான் முதலீடு செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார். 

 

Trending News