ஹைதராபாத் பாலியல் குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் காவல் ஆணையர் விசி சஜ்னாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன!
ஹைதராபாத்தில் வசித்து வந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி, கடந்த 27ஆம் தேதி கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் மருத்துவரின் கொலை சம்மந்தமாக போலீசார் முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு, ஷிவா ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர். அதில் 3 பேர் 18 வயதுக்கு குறைவான மைனர்கள். முகமது பாஷா என்பவர் லாரி ஓட்டுனர். மற்ற மூவரும் க்ளீனர்கள் ஆவர்.
பிரியங்காவின் இரு சக்கரவாகனத்தை முன்பே திட்டமிட்டு பஞ்சர் செய்த இவர்கள் உதவி செய்வது போல் நடித்துள்ளனர். ஆனாலும் அவர்களை பிரியங்கா நம்பாததால் தன் செல்போன் எண்ணை அந்த கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கொடுத்துள்ளார். இடையில் ஒரு தடவை பிரியங்கா தனது செல்போனில் இருந்து அந்த நம்பருக்கு ஒருமுறை அழைத்துள்ளார். அதை ஆதாரமாகக் கொண்டே போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.
Hyderabad: Locals had showered rose petals on Police personnel at the spot where accused in the rape and murder of the woman veterinarian were killed in an encounter earlier today pic.twitter.com/66pOxK1C2b
— ANI (@ANI) December 6, 2019
இந்நிலையில் இன்று அதிகாலை சம்பவம் நடந்த இடமான ஹைதராபாத் - பெங்களூரு நெடுஞ்சாலையான 44 நெடுஞ்சாலைக்கு குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, எப்படி கொலை செய்தார்கள் என்பதை நடித்து காட்டுமாறு கூறியுள்ளனர். அவர்கள் நடித்து காட்டும் போது, திடீரென தப்பி ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
#WATCH Hyderabad: 'DCP Zindabad, ACP Zindabad' slogans raised near the spot where where accused in the rape and murder of the woman veterinarian were killed in an encounter by Police earlier today. #Telangana pic.twitter.com/2alNad6iOt
— ANI (@ANI) December 6, 2019
பிரியங்கா எரித்து கொல்லப்பட்ட அதே இடத்திலேயே குற்றவாளிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைத்து விட்டதாக பலரும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பொது மக்கள் போலீசார் மீது பூக்களை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், போலீசாருக்கு ஆதரவாக கோஷம் போட்டனர். ''டிசிபி ஜிந்தாபாத்'', ''ஏசிபி ஜிந்தாபாத்'' என கோஷம் போட்டனர். தொடர்ந்து போலீசார் தூக்கி வைத்து கொண்டாடி உள்ளனர்.
அதேபோல், கல்லூரிக்கு பேருந்தில் சென்ற கல்லூரி மாணவிகள், என்கவுன்டர் குறித்த தகவல் அறிந்ததும், போலீசாரை நோக்கி, ஆதரவாக கோஷம் போட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அவர்களை நோக்கி கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.