டெல்லி அல்லாதவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க டெல்லி ஆளுநர் அனுமதித்திருப்பது டெல்லி மக்களுக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி அல்லாதவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க டெல்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளது டெல்லியில் வாழும் மக்களுக்கு ஒரு 'பெரிய பிரச்சனையையும்' சவாலையும் உருவாக்கும் என்று தேசிய தலைநகரின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்களன்று (ஜூன் 8, 2020) தெரிவித்துள்ளார்.
LG साहिब के आदेश ने दिल्ली के लोगों के लिए बहुत बड़ी समस्या और चुनौती पैदा कर दी है
देशभर से आने वाले लोगों के लिए करोना महामारी के दौरान इलाज का इंतज़ाम करना बड़ी चुनौती है।शायद भगवान की मर्ज़ी है कि हम पूरे देश के लोगों की सेवा करें।हम सबके इलाज का इंतज़ाम करने की कोशिश करेंगे
— Arvind Kejriwal (@ArvindKejriwal) June 8, 2020
டெல்லி அரசு நடத்தும் மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனை சிகிச்சைக்கான படுக்கைகள் டெல்லியில் வசிப்பவர்களுக்கு ஒதுக்கப்படும் என்ற முதல்வரின் முடிவை துணைநிலை ஆளுநர் பைஜால் ரத்து செய்த பின்னர் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
டெல்லியில் பிற மாநிலத்தவருக்கு இனிமேல் சிகிச்சைக் கிடையாது -கெஜ்ரிவால் முடிவு...
முன்னதாக முன்னதாக ஜூன் 7-ஆம் தேதி, டெல்லியில் கெஜ்ரிவால் அரசாங்கம் வெளிமாநில நபர்களுக்கு இனி மாநில அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது என்றும், டெல்லி அரசாங்கத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் டெல்லி மக்கள் மட்டுமே சிகிச்சை பெறுவார்கள் என்றும். பிற மாநில மக்கள் மத்திய அரசின் அதிகார வரம்பைக் கொண்ட AIIMS உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், டெல்லி முதல்வரின் இந்த உத்தரவை மற்றும் விதமாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் தலைவரும், துணைநிலை ஆளுநருமான பைஜால் ‘டெல்லியை சேராதவர் என்ற காரணத்தால் எந்தொரு நபருக்கும் சிகிச்சை மறுக்கப்பட கூடாது’ என மருத்துவர்கள் / மருத்துவமனைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆளுநரின் இந்த மறு உத்தரவை தொடர்ந்து டெல்லி முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது., "COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் நாடு முழுவதிலுமிருந்து வரும் மக்களுக்கு சிகிச்சையளிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் நாங்கள் சேவை செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார், அனைவருக்கும் சிகிச்சை அளிக்க நாங்கள் முயற்சிப்போம்" என்றும் முதல்வர் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
காய்ச்சல், தொண்டை வலி; கோவிட் -19 க்கு பரிசோதனை செய்யும் டெல்லி முதல்வர்...
இதற்கிடையில், காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக டெல்லி முதல்வர் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிய ஜூன் 9-ஆம் தேதி சோதைனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜூன் 9-ஆம் தேதி தேசிய தலைநகரில் COVID-19 சமூக பரிமாற்றத்தை மதிப்பிடுவதற்காக அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.