Ram temple: அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை எவ்வளவு நன்கொடை கிடைத்துள்ளது?

Ayodhya Ram temple Donations: கடந்த 3 ஆண்டுகளில் ரூ.4500 முதல் 5000 கோடி வரை நன்கொடை கிடைத்துள்ளது. நன்கொடையாக பெறப்பட்ட பணம் வங்கிகளில் வைப்புத்தொகையாக ஆக வைக்கப்படும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 9, 2024, 03:35 PM IST
  • அயோத்தியா ராமர் கோவிலுக்கு நன்கொடை
  • ரூ.4500 முதல் 5000 கோடி வரை நன்கொடை
  • வங்கிகளில் வைப்புத்தொகையாக வைக்கப்பட்ட நன்கொடை
Ram temple: அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை எவ்வளவு நன்கொடை கிடைத்துள்ளது? title=

Ram Mandir Trust: உத்தர பிரதேச மாநிலத்தில் ராம ஜென்ம பூமியான அயோத்தியாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் இன்னும் சில நாட்களில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, ராமர் அங்கு குடியேற காத்துக் கொண்டிருக்கிறது. இந்த கோவில் திறப்பு விழா உலக அளவில் பிரபலமான பேசுபொருளாக இருக்கிறது. ராமர் கோவில் கோவில் கட்டுமானத்தின் மொத்த திட்டச் செலவு 2000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தக் கோவில் கட்டுமானத்திற்காக, பக்தர்கள் தினமும் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.4500 முதல் 5000 கோடி வரை நன்கொடை கிடைத்துள்ளது. நன்கொடையாக பெறப்பட்ட பணம் வங்கிகளில் வைப்புத்தொகையாக ஆக வைக்கப்படும். அவை, குறிப்பிட்ட செலவுகளுக்காக தனித்தனியாக சேமிக்கப்படுகிறது. 

நன்கொடைகள் தவிர, அறக்கட்டளையானது ஆன்லைன், காசோலை மற்றும் ரொக்கம் உட்பட பல்வேறு முறைகள் மூலம் பக்தர்களிடமிருந்து தினசரி நன்கொடைகளைப் பெறுகிறது, நாளொன்றுக்கு சுமார் ₹2 லட்சம் வரை நன்கொடை பெறப்படுகிறது. ஒரு மதிப்பீட்டின்படி, அறக்கட்டளை மாதந்தோறும் ₹1 கோடிக்கு மேல் நன்கொடை பெறுகிறது.

பக்தர்களிடம் இருந்து அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நன்கொடை வசூலிப்பதாக கூறி நடைபெற்ற மோசடி ஒன்று அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மோசடி குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) கோரிக்கை விடுத்துள்ளது.  

மேலும் படிக்க | அயோத்தியில் புதிய விமான நிலையம் திறப்பு

"ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த் சேத்ரா அயோத்தி, உத்தரப் பிரதேசம்" என்ற பெயரில் உள்ள போலி சமூக ஊடகப் பக்கம், QR கோட் வெளியிட்டு, ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நன்கொடை பெறுவதாக தெரிவித்திருந்தது.

ராம் மந்திர் டிரஸ்ட், புது தில்லியில் உள்ள, வங்கிக் கணக்கில் வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் (NRI) இருந்தும் நன்கொடைகளைப் பெறத் தொடங்கியுள்ளது. கடந்த மாதம் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் (FCRA) கீழ் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது.

லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கும் அயோத்தி நகரில், கோவில், கோவில் வளாகம் மட்டுமின்றி, கோடிக்கணக்கான பக்தர்களுக்கு ஏற்ற வகையில் நகரம் முழுவதையும் தயார்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அரசு திட்டங்களும் அயோத்தியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோயில்... திறக்கவே இல்லை அதற்குள் பெரிய மோசடி புகார் - பின்னணி என்ன?

கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு, அமெரிக்காவில் கார் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணம் ஹியூஸ்டன் நகரில் இந்து மதத்தினர் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கார் பேரணி நடத்தப்பட்டது.

216 கார்களில் இந்திய தேசியக் கொடி, அமெரிக்காவின் தேசியக் கொடி மற்றும் காவிக்கொடிகளுடன் நூற்றுக்கணக்கான இந்துக்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர். ஹியூஸ்டனில் உள்ள ஸ்ரீ மீனாட்சி ஆலயத்தில் தொடங்கிய பேரணி 100 கிலோ மீட்டர் தூரம் சென்றது. 

'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷத்துடன் சென்ற  கார் பேரணி செல்லும் வழியில் 11 கோவில்களை கடந்து, ரிட்ச்மவுண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ சாரதாம்பா கோவிலில் நிறைவடைந்தது.  

மேலும் படிக்க | 1000 ஆண்டுகள் தாங்கும்... ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து பாறைகள் - எதற்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News