List of Chief Ministers of Karnataka: கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையா நாளை (மே 19, சனிக்கிழமை) பதவியேற்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் பசவராஜ் பொம்மையை அடுத்து, சித்தராமையா மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கிறார். கர்நாடக முதல்வராக 2013 முதல் 2018 வரை 5 ஆண்டுகள் பதவி வகித்த சித்தராமையா இரண்டாவது முறையாக முதல்வர் ஆகிறார். மே 18 அன்று காங்கிரஸ் கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கர்நாடகா மாநிலத்தின் 24வது முதல்வராக மூத்த அரசியல் தலைவர் சித்தராமையா பதவி ஏற்பார்.
காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அமைந்து ஆட்சி நடத்திய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி, மாநிலத்தில் பாஜக ஆட்சியை அமைத்தபோது, மாநில முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்பவனில் ஆளுநரிடம் அளித்தார். எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கர்நாடகாவின் 23வது முதல்வராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார். பி.எஸ். எடியூரப்பா அரசியல் செல்வாக்கு மிக்க லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் அதிக நாட்கள் முதல்வராக பதவி வகித்தவர்கள் யார்?
கர்நாடகா மாநிலத்தில் 1947 முதல் 2023 வரை முதல்வராக பதவி வகித்த பட்டியலில் அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.தேவராஜ் அர்ஸ் முதலிடம் வகிக்கிறார். அவர் இரண்டு முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். 1972 ஆம் ஆண்டு மார்ச் 20 முதல் 1977 ஆம் ஆண்டு டிசம்பர் 31 மற்றும் 1978 பிப்ரவரி 28 முதல் 1980 ஜனவரி 7 வரை என 2,790 நாட்கள் மாநில முதல்வராக பணியாற்றியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக நிஜலிங்கப்பா 2,729 நாட்கள் மாநில முதல்வராக பணியாற்றி உள்ளார். 1,967 நாட்கள் முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே, நீண்ட காலம் பதவி வகித்த கர்நாடக முதல்வர்களில் மூன்றாவது இடத்தையும், 1,901 நாட்கள் முதல்வராக ஆட்சி செய்த பிஎஸ் எடியூரப்பா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார். கடந்த முறை முதல்வராக இருந்த சித்தராமையா 1,828 நாட்கள் பதவியில் இருந்தார். எனவே அவர் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். அந்த வரிசையில் இந்த முறை, பிஎஸ் எடியூரப்பா மற்றும் ராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோரின் சாதனையை சித்தராமையா முறியடிப்பார். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் முதல்வராக பதவி வகித்தால் இந்த முறை கர்நாடகாவில் அதிக காலம் பதவி வகித்த முதல்வர்களில் சித்தராமையா மூன்றாவது இடத்திற்கு உயருவார். இந்த பட்டியலில் தற்போது சித்தராமையா ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
மேலும் படிக்க: கர்நாடகா: முதல்வர் சித்தராமையாவுக்கு முன் இருக்கும் 5 முக்கிய சவால்கள்!
சித்தராமையாவுக்குப் பிறகு, எஸ்.எம்.கிருஷ்ணா இந்தப் பட்டியலில் இடம்பெற்று 1,691 நாட்கள் முதல்வராக பதவி வகித்துள்ளார். கே.சி.ரெட்டி (1618 நாட்கள்), கெங்கல் ஹனுமந்தையா (1,603 நாட்கள்), பி.டி.ஜட்டி (1,393 நாட்கள்), வீரேந்திர பாட்டீல் (1,337 நாட்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஆனால், கடிடல் மஞ்சப்பா 73 நாட்கள் மட்டுமே கர்நாடக முதல்வராக ஆட்சி செய்தார். பாதிக்கும் மேற்பட்ட முதல்வர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆட்சி செய்திருக்கிறார்கள். கர்நாடகாவில் 6 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி விதிக்கப்பட்டது.
கர்நாடகா முதல் அமைச்சர்களின் முழுமையான பட்டியல்:
1. கே. செங்கலராய ரெட்டி, காங்கிரஸ் (அக்டோபர் 25, 1947 - மார்ச் 30, 1952)
2. கெங்கல் ஹனுமந்தையா, காங்கிரஸ் (மார்ச் 30, 1952 - ஆகஸ்ட் 19, 1956)
3. கடிடல் மஞ்சப்பா, காங்கிரஸ் (ஆகஸ்ட் 19, 1956 - அக்டோபர் 31, 1956)
4. எஸ்.நிஜலிங்கப்பா (2 முறை முதல்வர்) காங்கிரஸ் (நவம்பர் 1, 1956 - மே 16, 1958) - (ஜூன் 21, 1962 - மே 28, 1968)
5. பி.டி. ஜட்டி, காங்கிரஸ் (மே 16, 1958 - மார்ச் 9, 1962)
6. எஸ்.ஆர். காந்தி, காங்கிரஸ் (மார்ச் 14, 1962 - ஜூன் 20, 1962)
7. வீரேந்திர பாட்டீல், காங்கிரஸ் (மே 29, 1968 - மார்ச் 18, 1971) - (நவம்பர் 30, 1989 - அக்டோபர் 10, 1990)
ஜனாதிபதி ஆட்சி (19 மார்ச் 1971 - 20 மார்ச் 1972)
8. டி.தேவராஜ் அர்ஸ், காங்கிரஸ் (மார்ச் 20, 1972 - டிசம்பர் 31, 1977) - (பிப்ரவரி 28, 1978 - ஜனவரி 7, 1980)
ஜனாதிபதி ஆட்சி (டிசம்பர் 31, 1977 - பிப்ரவரி 28, 1978)
9. ஆர்.குண்டு ராவ், காங்கிரஸ் (ஜனவரி 12, 1980 - ஜனவரி 6, 1983)
10. ராமகிருஷ்ண ஹெக்டே, ஜனதா கட்சி (ஜனவரி 10, 1983 - ஆகஸ்ட் 10, 1988)
11. எஸ்.ஆர். பொம்மை, ஜனதா கட்சி (ஆகஸ்ட் 13, 1988 - ஏப்ரல் 21, 1989)
ஜனாதிபதி ஆட்சி (ஏப்ரல் 21, 1989 - நவம்பர் 30, 1989)
ஜனாதிபதி ஆட்சி (அக்டோபர் 10, 1990 - அக்டோபர் 17, 1990)
12. எஸ்.பங்காரப்பா, காங்கிரஸ் (அக்டோபர் 17, 1990 - நவம்பர் 19, 1992)
13. மு. வீரப்ப மொய்லி, காங்கிரஸ் (நவம்பர் 19, 1992 - டிசம்பர் 11, 1994)
14. எச்.டி. தேவ கவுடா, ஜனதா தளம், (டிசம்பர் 11, 1994 - மே 31, 1996)
15. ஜே.எச். படேல், ஜனதா தளம் (மே 31, 1996 - அக்டோபர் 07, 1999)
16 எஸ்.எம். கிருஷ்ணா, காங்கிரஸ் (அக்டோபர் 11, 1999 - மே 28, 2004)
17. தரம் சிங், காங்கிரஸ் (மே 28, 2004 - பிப்ரவரி 2, 2006)
18. எச்.டி.குமாரசாமி, மதச்சார்பற்ற ஜனதா தளம் (பிப்ரவரி 3, 2006 - அக்டோபர் 8, 2007) - (மே 23, 2018 - 23 ஜூலை 2019)
ஜனாதிபதி ஆட்சி (அக்டோபர் 8, 2007 - நவம்பர் 12, 2007)
19. பிஎஸ் எடியூரப்பா, பாஜக (நவம்பர் 12, 2007 - நவம்பர் 19, 2007) - (மே 30, 2008 - ஆகஸ்ட் 4, 2011) - (மே 17, 2018 - மே 23, 2018) - (26 ஜூலை 2019 - 26 ஜூலை 2021)
ஜனாதிபதி ஆட்சி (நவம்பர் 20, 2007 - மே 29, 2008)
20. டி.வி சதானந்த கவுடா, பாஜக (5 ஆகஸ்ட் 2011 - ஜூலை 11, 2012)
21. ஜெகதீஷ் சிவப்பா ஷெட்டர், பாஜக (ஜூலை 12, 2012 - 8 மே 2013)
22. சித்தராமையா, காங்கிரஸ் (மே 13, 2013 - மே 15, 2018)
23. பசவராஜ் பொம்மை, பாஜக (28 ஜூலை 2021-13 மே 2023)
24. சித்தராமையா, காங்கிரஸ் (20 மே 2023 முதல்......)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ