மக்களவை தேர்தலில் போட்டியிட காங்., இணையும் ஹார்டிக் படேல்!!

டேல் சமூகத்தினருக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த ஹர்திக் படேல், காங்கிரஸ் கட்சியின் இணைவதாக தகவல்!!

Last Updated : Mar 12, 2019, 08:09 AM IST
மக்களவை தேர்தலில் போட்டியிட காங்., இணையும் ஹார்டிக் படேல்!! title=

டேல் சமூகத்தினருக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த ஹர்திக் படேல், காங்கிரஸ் கட்சியின் இணைவதாக தகவல்!!

நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11 தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஜம்மு-கஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 23, ஏப்ரல் 29 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், படேல் இன மக்களுக்காகபடேல் சமுதாயத்தினருக்கு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, ஹர்திக் படேல் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார். ஹர்திக் படேல். இவர் வருகிற மார்ச் 12 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்தின் ஜாம்நகர் தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது குஜராத்தின் ஜாம்நகர் தொகுதியில் பாஜக-வின் பூனம்பென் மாதம் எம்.பி ஆக உள்ளார். இதே தொகுதியில் பாஜக-வுக்கு செக் வைக்கும் வகையில் ஹர்திக் படேலை காங்கிரஸ் நிறுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அஹமதாபாத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வோடு ஹர்திக் படேல் காங்கிரஸில் ராகுல் முன்னிலையில் இணைவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கூடுதலாக, குஜராத், மோடியின் கோட்டை என்பதால் அம்மாநிலத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் மேல் கூடுதலாகக் கவனம் செலுத்த உள்ளது காங்கிரஸ்.

 

Trending News