புதுடெல்லி: நாடு முழுவதும் திருத்தப்பட்ட 2019 மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் ஆம், அவர்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதால் அபராதத்தை எதிர்கொள்கின்றனர். புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒரு நாளில் லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதங்கள் விதிக்கப்பட்டு உள்ளன.
செப்டம்பர் முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுக்க அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தில் அபராதங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அபராதத்தை எதிக்கொள்ள வேண்டிருக்கிறது.
புதிய போக்குவரத்து சட்டத்தின் கீழ் குருக்ராமில் ஒரே நாளில் சுமார் 950 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதில் ஒரு ஸ்கூட்டியில் பயணித்த நபருக்கு அதிக அளவிலான தொகையில் அபாரதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
அதாவது ஓட்டுநர் உரிமமின்றி, தலைக்கவசம் அணியாமல் பயணித்த நபருக்கு (தினேஷ் மதான்) புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 23 ஆயிரம் ரூபாய்க்கு அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டது. அவரால் அபராதம் தொகையை செலுத்த முடியாததால், ஸ்கூட்டியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஏன் இவ்வளவு தொகை போடப்பட்டது என்றால்...!! ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கு ரூ.5,000, ஹெல்மட் இல்லாமல் பயணித்ததற்கு ரூ.1,000, வண்டியின் பதிவு சான்றிதழ் இல்லாததற்கு ரூ.5,000, மூன்றாம் நபர் பைக் காப்பீடு எடுக்காததற்கு ரூ.2,000, காற்று மாசுபாட்டின் தரத்தை மீறியதற்காக ரூ.10,000, என மொத்தம் 23,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.