ஜிஎஸ்டி துவக்க விழா - அழைப்பு விடுத்த அருண்ஜெட்லி!!

Last Updated : Jun 20, 2017, 02:12 PM IST
ஜிஎஸ்டி துவக்க விழா - அழைப்பு விடுத்த அருண்ஜெட்லி!! title=

ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி மசோதா அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான துவக்க விழா ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு  நாடாளுமன்றத்தில் நடைபெறும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.  

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு(சரக்கு மற்றும் சேவை வரி) அமுல் படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) விதிப்பு அரசியல் சாசன திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.

இதையடுத்து சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் கடந்த 4-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதேபோல நேற்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இன்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:-

ஜிஎஸ்டி வரி துவக்க விழா நாடாளுமன்றத்தில் ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு நடைபெறும் என தெரிவித்தார். மேலும் இந்த துவக்க விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், அனைத்து மாநில முதலமைச்சர்களும், நிதி அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

Trending News