அதிகாரப் பகிர்வு தொடர்பாக சிவசேனாவுடன் தொடர்ந்து மோதல் நீடித்து வரும் நிலையில், மாநிலத்தில் அரசாங்கத்தை உருவாக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி பாரதிய ஜனதாவை அழைக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஒரு நாள் கழித்து, இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் பதவிக்காலம் சனிக்கிழமை (நவம்பர் 9) முடிவடைகிறது, எனவே, இன்று இறுதிக்குள் மாநிலத்தில் ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.
எவ்வாறாயினும், பாஜக சிறுபான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவாக இல்லை, மேலும் அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆளுநரின் அழைப்பை கட்சி நிராகரிக்கக்கூடும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில், பாஜக, மாநிலத்தில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. நடந்து முடிந்த மாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56, ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54, மற்றும் காங்கிரஸ் 44 இடங்களையும் வென்றது. அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமை கோர, ஒரு கட்சிக்கு 145 இடங்கள் தேவை. ஆனால் எந்தொரு கட்சியும் தனி பெருமை கொண்டிருக்காத நிலையில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக-வை இன்று ஆளுநர் ஆட்யமைக்க அழைப்பார் என கூறப்படுகிறது.
ஒருவேளை அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டத்தை பாஜக நிராகரித்தால், ஆளுநர் இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை அரசாங்கத்தை உருவாக்க அழைப்பார். இருப்பினும், உத்தவ் தாக்கரேவின் கட்சி மகாராஷ்டிராவில் சுயாதீனமாக ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான பாதையில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. 56 MLA-க்களைத் தவிர, இது ஒரு சில சுயேச்சைகளின் ஆதரவைக் கொண்டுள்ளது. என்றபோதிலும் சிறுபான்மை ஆட்சி அமைக்க சிவசேனா முன்வருமா என்பது கேள்விக்குறியே...
161 ஒருங்கிணைந்த இருக்கை வலிமை கொண்ட பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை மகாராஷ்டிராவில் எளிதில் கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருக்க முடியும், ஆனால் அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பிளவு காரணமாக, தாமதம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவி தொடர்பாக இரு கட்சிகளும் கடும் மோதலில் அடைக்கப்பட்டுள்ளன. 50:50 சூத்திரத்தின் கீழ் ஒரு அரசாங்கத்தை அமைக்க சிவசேனா விரும்புகிறது, ஆனால் சிவசேனாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது என்று பாஜக தெளிவாகக் கூறியுள்ளது.
இதனிடையே சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஆதரவையும் பெறலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. இருப்பினும், அவர்களது கட்சிகளின் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ஷரத் பவார் இதற்கு இன்னும் பச்சை சமிக்ஞை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.