வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த தொழிலாளர்களுக்கு வேலை...

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

Last Updated : Jun 4, 2020, 07:32 AM IST
  • ஸ்வேட்ஸ் என்ற திட்டத்தின் கீழ் வெவ்வேறு நபர்களின் திறமைக்கு ஏற்ப தரவுத்தளங்களை உருவாக்க அரசாங்கம் தொடங்கியுள்ளது.
  • SWADES (வேலைவாய்ப்பு ஆதரவுக்கான திறமையான தொழிலாளர்கள் வருகை தரவுத்தளம்) என்ற பெயரில் இந்த திட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தொழில் இணைந்து செயல்படுகின்றன.
வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த தொழிலாளர்களுக்கு வேலை... title=

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

ஸ்வேட்ஸ் என்ற திட்டத்தின் கீழ் வெவ்வேறு நபர்களின் திறமைக்கு ஏற்ப தரவுத்தளங்களை உருவாக்க அரசாங்கம் தொடங்கியுள்ளது. SWADES (வேலைவாய்ப்பு ஆதரவுக்கான திறமையான தொழிலாளர்கள் வருகை தரவுத்தளம்) என்ற பெயரில் இந்த திட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தொழில் இணைந்து செயல்படுகின்றன.

READ | வழித்தடத்திற்கு ஏற்ப டிக்கெட் விலை!! 3.5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விமான கட்டணம்...

திறன் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் வெளிவிவகார அமைச்சகம் ஆகிய இரண்டும் இதற்கு உதவுகின்றன. இதன் கீழ் கட்டணமில்லா எண்ணும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தொழிலாளர்கள் ஆன்லைன் படிவத்தை நிரப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதில், அவர்கள் தங்கள் திறனை விவரிக்க வேண்டும். படிவத்தை தொழிலாளர்கள் www.nsdcindia.org/swades என்ற போர்ட்டலில் நிரப்பலாம்.

பிரதமரின் பார்வையின் அடிப்படையில் வந்தே பாரத் மிஷனின் கீழ் தொழிலாளர்களின் திறன் வரைபடத்தை நாங்கள் செய்து வருகிறோம் என்று மத்திய திறன் மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூட்டாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சிவில் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், இந்தியாவுக்கு வந்துள்ள தொழிலாளர்கள் வேலை இழப்பு காரணமாக வந்துள்ளனர். அவர்களுக்கு சிறப்புத் திறன்கள் உள்ளன. இது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் நிறைய பங்களிக்க முடியும். எனவே அவர்களுக்கு உதவும் விதமாக இந்த போர்ட்டலை உருவாக்க திறன் மேம்பாட்டு அமைச்சகத்தை அணுகினோம். விமானத்தில் வந்தா பாரத் மிஷனின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம், விமான நிலையத்தில் பதாகைகளையும் வைத்துள்ளோம், இந்த முயற்சி குறித்த தகவல்களை அவர்களுக்கு அனுப்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக முன்னோடியில்லாத சூழ்நிலையில் நமது குடிமக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய முயற்சிக்கிறோம் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். அந்த மக்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறும் சவாலுடன் போராடுகிறார்கள். எங்கள் தூதர்கள், உயர் ஸ்தானிகராலயம், தூதரகம் மூலம் ஸ்வேட்ஸ் முன்முயற்சியை ஊக்குவிக்கிறோம். இதன் மூலம், இந்தியாவுக்குத் திரும்பும் மக்கள் தங்கள் திறமைகளின் அடிப்படையில் வரிசைப்படுத்த உதவப்படுவார்கள்.

READ | Vande Bharat Mission: ஜூன் 11 முதல் அமெரிக்கா, கனடாவுக்கு மேலும் 70 விமானங்களை ஏர் இந்தியா இயக்கம்...

வந்தே பாரத் மிஷனின் கீழ், லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினர், அதில் 57,000 பேர் அரசாங்கத்தால் இதுவரை திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த தொழிலாளர்கள் திரும்பி வந்த இந்திய மாநிலங்களில், ஏராளமானோர் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில்தான் பெரும்பாலான தொழிலாளர்கள் இந்தியா திரும்பியுள்ள நாடுகள். அதே நேரத்தில், பெரும்பாலான தொழிலாளர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு, கட்டுமானம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், வாகன மற்றும் விமானத் துறைகளில் பணியாற்றியவர்கள் என அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News