நற்செய்தி: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் நாட்டில் 705 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர்

கடந்த சில நாட்களாக, குணமடைந்து வருவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு இது மிகவும் நல்ல அறிகுறியாகும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 21, 2020, 04:21 PM IST
  • நாட்டில் மொத்தம் 18,601 கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளன.
  • அவற்றில் 3,252 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
  • திங்களன்று மட்டும் 705 நோயாளிகள் கொரோனாவிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
  • இது ஒரே நாளில் நாட்டில் குணமடைந்தவர்களின் அதிக எண்ணிக்கையாகும்
  • தமிழ்நாட்டில் 457 பேர் தற்போது வரை குணமாகியுள்ளனர். தமிழகத்தில் மீட்பு விகிதம் 96.5 சதவீதமாகும்.
நற்செய்தி: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் நாட்டில் 705 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் title=

புது தில்லி: கொரோனா வைரஸ் நாட்டில் தனது ஆதிக்கத்தை பரப்பி வருகிறது. சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, நாட்டில் இதுவரை 18,601 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 590 பேர் இறந்துள்ளனர். இருப்பினும், இதற்கிடையில் ஒரு நல்ல மற்றும் நிம்மதியான செய்தி என்னவென்றால், மக்கள் இப்போது வேகமாக குணமடைந்து வருகின்றனர். இதுவரை, நாட்டில் 3,252 நோயாளிகள் சிகிச்சைக்கு பின்னர் முழுமையாக குணமடைந்துள்ளனர். திங்களன்று மட்டும், 705 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர். இது நாட்டில் ஒரே நாளில் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களின் அதிக எண்ணிக்கையாகும்.

கடந்த சில நாட்களாக, குணமடைந்து வருவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு இது மிகவும் நல்ல அறிகுறியாகும். கடந்த சில நாட்களின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், ஏப்ரல் 15 அன்று 183 பேர் குணமடைந்து உள்ளனர். அடுத்த நாள், அதாவது ஏப்ரல் 16 அன்று இந்த எண்ணிக்கை 260 ஆக அதிகரித்தது. ஏப்ரல் 17 அன்று, கொரோனாவிலிருந்து 243 பேர் விடுவிக்கப்பட்டனர். ஏப்ரல் 18 அன்று 239 பேர் விடுவிக்கப்பட்டனர். இதேபோல், ஏப்ரல் 19 அன்று, 316 நோயாளிகள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தனர். ஏப்ரல் 20 அன்று, 705 பேர் கொரோனா வைரஸிலிருந்து விடுபட்டு வீடு திரும்பினார்.

நாள் கொரோனாவிலிருந்து குணமானவர்கள்
15 ஏப்ரல் 183
17 ஏப்ரல் 243
18 ஏப்ரல் 239
19 ஏப்ரல் 316
20 ஏப்ரல் 705
இறப்பு 590

 

கேரளாவில் 291 நோயாளிகளும், தமிழகத்தில் 457 நோயாளிகளும் குணப்படுத்தப்பட்டனர்:

தமிழ்நாட்டில் 457 பேர் மற்றும் கேரளாவில் 291 பேர் தற்போது வரை குணமாகியுள்ளனர். ராஜஸ்தானில் 205, தெலுங்கானாவில் 190, மத்திய பிரதேசத்தில் 127, குஜராத்தில் 131, ஹரியானாவில் 127 ஆகியவை சிகிச்சையின் பின்னர் குணப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், பீகாரில் மொத்தம் 113 நோயாளிகளில் 42 பேர் இதுவரை குணமாகியுள்ளனர். உ.பி. பற்றி பேசுகையில், இங்குள்ள 1184 நோயாளிகளில் 140 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். 

மகாராஷ்டிராவில் 572, டெல்லியில் 431 சரி:

மாநிலங்களின்படி பேசினால், மிக மோசமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் 572 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தேசிய தலைநகர் டெல்லியில் 431 பேர் ஆகும். 

மீட்பு விகிதத்தில் கேரளா முதலிடத்தில் உள்ளது:

மீட்பு விகிதத்தில் கேரளா முதலிடத்தில் உள்ளது. அங்கு 291 பேர் சிகிச்சையின் பின்னர் குணப்படுத்தப்பட்டனர். 3 நோயாளிகளை காப்பாற்ற முடியவில்லை. அதாவது, கேரளாவில் மீட்பு விகிதம் 98.97 ஆகும். இதேபோல், தமிழகத்தில் மீட்பு விகிதம் 96.5 சதவீதமாகும். அதேபோல் மற்ற மாநிலங்களை பார்த்தால், கர்நாடகாவில் 87.4 சதவீதம், உ.பி.யில் 86.4 சதவீதம், மகாராஷ்டிராவில் 69.5, மத்திய பிரதேசத்தில் 64.5, குஜராத்தில் 62.5, டெல்லியில் 61.5 சதவீதம் என்ற அடிப்படையில் மீட்பு விகிதம் உள்ளது.

Trending News