PAK? கர்தார்பூர் நடைபாதை திறக்கும் விழாவிற்கு செல்லும் மன்மோகன் சிங்

முன்னால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கர்த்தர்பூர் நடைபாதை திறக்கும் விழாவிற்கு செல்வார். ஆனால் பாகிஸ்தானின் அழைப்பு ஏற்று அல்ல. பஞ்சாப் முதல்வரின் அழைப்பு ஏற்று...!! 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 3, 2019, 03:27 PM IST
PAK? கர்தார்பூர் நடைபாதை திறக்கும் விழாவிற்கு செல்லும் மன்மோகன் சிங்  title=

புதுடில்லி: "கர்தார்பூர் நடைப்பாதை திறக்கும் தொடக்க விழாவிற்கு கலந்து கொள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் செல்ல இருக்கிறார். நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள தொடக்க விழாவிற்கு அவர் கலந்துக்கொள்வார். ஆனால் பாகிஸ்தானின் அழைப்பு ஏற்று அல்ல. பஞ்சாப் முதல்வரின் அழைப்பின் பேரில் செல்வார். உண்மையில், பாகிஸ்தான் அரசாங்கமும் மன்மோகன் சிங்க்கு ஒரு அழைப்பை அனுப்பியது. ஆனால் அந்த அழைப்பு அவர் நிராகரித்து விட்டார். பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் இன்று (வியாழக்கிழமை) மன்மோகன் சிங்கை சந்தித்து கர்த்தார்பூர் நடைபாதையின் துவக்க விழாவில் வருமாறு அழைத்தார். இதனையடுத்து முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் நவம்பர் 9 ஆம் தேதி முதல் நடைபெறும் தொடக்க விழாவிற்கு கேப்டன் அமரீந்தருடன் கர்தார்பூருக்குச் செல்வார்.

நவம்பர் 9 ஆம் தேதி சீக்கிய பக்தர்களுக்காக கர்த்தார்பூர் நடைபாதை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி எஸ்.எம்.குரேஷி கடந்த வெள்ளிக்கிழமை மன்மோகன் சிங்க்கு அழைப்பு விடுத்திருந்தார். அதவாது "கர்தார்பூர் நடைப்பாதை திறக்கும் தொடக்க விழாவிற்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அழைக்க விரும்புகிறோம். அவர் சீக்கிய சமூகத்தையும் பிரதிநிதியாக உள்ளார். நாங்கள் அவருக்கு முறையான அழைப்பிதழை அனுப்பி உள்ளோம்" எனத் தெரிவித்திருந்தார். 

ஆனால் பாகிஸ்தான் அரசு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பவில்லை. ஆனால் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை அழைத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த இராஜதந்திரம் வெற்றி பெறவில்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் அழைப்பை முன்னாள் பிரதமர் மன்மோகன் நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் சென்று வர கர்தார்பூர் வழிதடம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த நடைபாதையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தான் நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Trending News