வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிப்பு!
வங்கிக் கணக்குகளில் குறைபட்ச தொகை வைக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் அபராதம் வசூலிக்கின்றன. 2017 மற்றும் 2018 ஆம் நிதி ஆண்டில் மட்டும் குறைபட்ச வைப்புத்தொகை வைக்காத வங்கிக் கணக்குகளின் வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் 5,000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளன.
இதில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மட்டும் 2,433 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. இதனையடுத்து, எச்.டி.எப்.சி 590 கோடி ரூபாயும், ஆக்சிஸ் வங்கி 530 கோடியும், ஐசிஐசிஐ வங்கி 317 கோடி ரூபாயும் முறையே அபராதமாக வசூலித்துள்ளன.
இந்த தகவலை மக்களவையில் மத்திய நிதி இணையமைச்சர் சிவ் பிரதாப் சுகலா தெரிவித்தார். வங்கிகளின் அபராத வசூலிப்பு ஏழை எளிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.