உலக கோப்பை கால்பந்து போட்டியின் டி பிரிவு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததை அடுத்து அர்ஜென்டினா அணியின் ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்!
உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் குரோஷியா அணி 3–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வெற்றிக்கொண்டது. நிஸ்னி நவ்கோரோட் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த ஆட்டத்தில் 2 முறை சாம்பியன் பட்டம் அர்ஜென்டினா அணி, குரோஷியாவை எதிர்கொண்டது.
Kerala: A 30-year-old fan of Argentina's player Lionel Messi went missing on Thursday, hours after Argentina's 3-0 loss to Croatia in 2018 FIFA World Cup. Visuals of police investigating the spot, yesterday. pic.twitter.com/M6zWK0nqpG
— ANI (@ANI) June 23, 2018
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அர்ஜென்டினா அணி தடுமாறியது. எதிர்முனையில் குரோஷியா அணியும் தங்கள் பங்கிற்கு எதிர்ப்பு ஆட்டத்தினை கொடுத்தது. எனினும் இரு அணியினருக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தும், அதனை வீணாக்கினார்கள். முதல் பாதியில் இரு அணியினராலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
இரண்டாவது பாதியில் ஆக்ரோசமான விளையாட்டை வெளிப்படுத்திய குரோஷியா அணி 3 கோல்களை அடித்தது. ஆட்டத்தின் முடிவில் அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
இந்த தோல்வியானது அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த கால்பந்து ரசிகர்களை மட்டுமல்லாமல், அந்த அணியையும், அணித்தலைவர் மெஸ்சியையும் நேசிக்கும் பிற நாட்டு ரசிகர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.
இந்நிலையில் கேரளாவின் கோட்டையத்தை சேர்ந்த 30 வயதான டினு அலெக்ஸ் என்பவர், மனம் உடைந்த நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் இதுவரை திரும்பவில்லை.
அவரது வீட்டு அறையில் சோதனை செய்ததில் ‘அர்ஜென்டினா அணியின் தோல்வியால் அதிர்ச்சி அடைந்ததாகவும், அதனால் தனது வாழ்க்கையை முடித்து கொள்கிறேன்’ என்று அவர் எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்று மட்டும் சிக்கியுள்ளது.
மோப்ப நாயின் உதவிகொண்டு தேடுகையில், அது அருகில் இருக்கும் ஆற்றங்கரை வரை மட்டுமே சென்றுள்ளது. இதனால் ஒருவேலை டினு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டாரா என்று சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது!